வியாழன், 12 ஜூன், 2025

ஓடிய கால்கள்

 நினைவு இருக்கிறதா நண்பா நடையாய் நடந்த நாட்கள்

கனவு போன்ற வாழ்க்கை காலில் உதைத்த பந்தாய்
தமிழில் படித்த நம்மால் தரணியும் சுற்ற முடியும்
தடித்த புத்தகங்கள் படித்த ஞாபகம் மனதில் உளதா
கடிந்த கணித வாத்தியார் கணக்கில் புலியாய் ஆனோம்
படித்த கதைகள் பலவும் பள்ளியை விட்டதும் மறந்தோம்
பிடித்த பொருளை வாங்க பித்தளைக் காசு இல்லை
வடிகட்டி நீரை அல்ல குடித்த குழாய் நீரே
ஓடிய கால்கள் உதைத்த பந்துகள் கைகளில் கிரிக்கெட்
பிரம்படி பட்டுச் சிவந்த கைகள் விரல் வலியில்
வரம்பு இல்லை குறும்பு செய்யவே நாளும் நமக்கு
மிடுக்காய் உடை அணிய என்சிசி பிரிவு உண்டு
உடுக்க மிடுக்காய் காக்கி வெள்ளை சீருடை அன்று
வெள்ளைத் தேவதைகள் நம் பள்ளியின் எதிரே பவனி வந்தனர்
பிள்ளைப் பருவம் என்பர் முற்றிய பழங்களும் உண்டு
ஆறு ஆண்டுகள் ஆயிரம் நினைவுகள் மனதில்
ஆறுதல் உண்டு கூடுவோம் இன்றும் குதூகலம் மனதில்

கருத்துகள் இல்லை: