கம்போடிய வியட்னாம் சுற்றுலா (11/2/25 to 22/2/25)
ஒரு வழியாக போன் காலைக் கட் செய்து, பயணம் தொடர்ந்தது, Aero show நடந்து கொண்டிருப்பதால், டிராபிக் ஜாம் இருக்குமென்ற பயத்தில், குறுகலான தெருக்களில் நுழைந்து, பேலஸ் குட்டஹள்ளி வழியாக நெடுஞ்சாலையில் நுழைந்து, விமான நிலையம் செல்லும் Elevated high wayல் பயணித்து, குழுவில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது எட்டரை மணியே ஆகியிருந்தது.
Travel Mart rep வந்து அவரவர் விசா, விமான டிக்கட் பிரிண்ட் அவுட் போல்டரை, ஒவ்வொருவராய் அழைத்துக் கொடுத்த பிறகு, மற்றவர் வருவதற்குள் இரவு உணவை முடித்து விடலாம் என எண்ணி, கீழிறங்கி, ஃபிரைட் ரைஸ் இனம் தெரியாத குழம்பும் சாப்பிட்டு காப்பி அருந்தி மேலே வந்தபோது அனைவரும் செக் இன் செய்யச் சென்றிருந்தனர். நானும் அவர்களுடன் வரிசையில் நின்று சூட்கேசை எடை போட்டபோது 18.3 Kg மட்டுமே இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரே சிறிய பேக்பேக் வகை பையோடு, கடைகள் வழியாக செக்யூரிட்டி முடித்து நடந்து கேட் C2 அடைந்தபோது, விமான நிலைய எல்லைக்கே வந்தது போல் இருந்தது. சில மணி நேரக் காத்திருப்புக்குப் பின், விமானம் ஓடு பாதையை விட்டு மேலேறத் தொடங்கியது. கோலாலம்பூர் சென்று வேறொரு விமானத்தில் செல்ல செக்யூரிட்டி முடித்து, பேருந்தில் ஏறி, கேட் G2 அடைந்தபோது , விமானம் ஒரு மணி நேரம் தாமதமென அறிவிப்பு வந்தது.
இரவு பயணத்திற்குப் பிறகு , இத்தகைய தாமதங்கள், உறக்கமில்லாத முந்தைய இரவின் சோர்வும் சேர்ந்து எரிச்சல் மூட்டவே செய்யும். ஒரு வழியாக நாம் பென் ( கம்போடியா) செல்லும் விமானம் உயரப் பறந்த போது, புதிதாய் இன்னொரு நாட்டினைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு மனதில் எழுந்தது.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக