வியாழன், 12 ஜூன், 2025

வாய்ப்பு ஒன்று

 பொங்கும் கடலால் உலகம் அழியுமாம்

எங்கும் உலவும் சாதிகள் அழியுமா ?
முக்கடல் பொங்கி பிரளயம் உண்டாம்
சாக்கடையான சண்டைகள் மறைந்து போகுமா ?
நாடுகள் தோறும் பொசுங்கிப் போகுமாம்
கோடுகள் தொலைந்த எல்லைகள் தோன்றுமா ?
மனிதனை மனிதனே மாய்ப்பது உண்டாம்
மங்கிய அறிவு ஒளி்ர்ந்து நிமிருமா ?
வஞ்சக மனிதர் நிறைந்த உலகமாம்
எஞ்சிய நாட்களில் மாற்றம் வருமா ?
விட்டில் பூச்சிக்கு நெருப்பே சுகமாம்
பட்டது போதுமென்ற பண்பு திரும்புமா ?
ஏய்ப்பது ஏமாற்றுவது எங்கும் பரவுதாம்
வாய்ப்பு ஒன்று உண்மைக்கு உண்டா ?

கருத்துகள் இல்லை: