கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 18/2/25
வியட்னாமின் பல இடங்களில் போரின் எச்சங்களைக் காண முடிந்தது. அமெரிக்கர்களின் Big Brother attitude பல நாடுகளைச் சீரழித்துள்ளது. இப்போது சீனர்களும் தொடங்கியுள்ளனர். கம்யூனிசம் என்பது அனைவரையும் சமமாக க் கருதுவது என்பது போய் அடக்குமுறை ஆட்சியாக மாறிப் போனதை கம்போடிய சரித்திரம் உணர்த்தியது.
இன்று முழுவதும் வியட்னாமிய நாட்டின் அரச மாளிகை முதல் போர் கண்காட்சி என தொடர்ந்தது. மிகப் பிரமாண்டமான பல அடுக்குகள் கொண்ட போர் அருங்காட்சியகம், அறைகள் பழைய வரலாற்று காட்சிகளை நினைவூட்டின. திறந்த வெளியில் போரில் கைப்பற்றப் பட்ட விமானங்கள்,ஹெலிகாப்டர்கள் என பிரமாண்டமாய் காட்சியளித்தன. நன்றாக வடிவமைக்கப் பட்ட மியூசியத்ததைப் பார்வையிட்டு போட்டோக்கள் எடுத்து வெளியே வந்து சுற்றுச் சுவரில் உட்கார்ந்த போது வியட்னாமியக் குழந்தை ஒன்று இங்கும் அங்கும் ஓடியபடி இருந்தது. நான் மொபைல் கேமிராவில் கிளிக் செய்ய முயன்றபோது அன்னையின் பின்னால் மறைந்து கொண்டது. எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து ஒரு வழியாக போட்டோவிற்குள் மாட்டியது.
அனைவரும் திரும்பியதும் அடுத்தது Golden Hotel விசிட். தங்க நிறப் பூச்சு ஓட்டல் முழுவதும், டாய்லெட்டில் கூட. காப்பி அருந்தப் போகிறோம என்று சொல்லி உள்ளே நுழைந்து, என்னைப் போன்ற சிலர் மட்டும் காப்பி அருந்த மற்றவர் அனைத்து இடங்களையும் போட்டோ எடுப்பதில் தீவிரமாக இருந்தனர். நம்மூர் Star Bucks விலையில் நல்ல காபி கிடைத்தது.
அடுத்த இடம் Train Street என சொல்லப்படும் , இரயில் பாதையின் இரு புறமும் கடைகள் நெருக்கமாக, ஆனாலும் வேகம் குறையாமல் கடக்கும் Train . இங்கே காப்பி்முன்னே ஆர்டர் செய்து ஸீட் ரிசர்வ் செய்து இரயில் பாதையின் ஒருபுறம் நாற்காலிகளில் அமர்ந்தோம். இரயில் வரவுக்காகக் காத்திருந்த நேரத்தில் பலவித பொருட்களின் விற்பனையும் கூடவே.
இரயில் தூரத்தில் வரும் சத்தம் கேட்டவுடன், நாற்காலிகள் மடக்கப்பட்டு மொபைல்கள் வீடியோ மோடில் தயாராக. ஒவ்வொரு மொபைலும் Train கடப்பதைப் பதிவு செய்தன. புதுவித அனுபவம் இது. மீண்டும் பயனித்து, Hanoi ஏர்போர்ட் அடைந்து , செக் இன் செய்து, Da Nang விமானப் பயணம். ஓட்டல் செக் இன் செய்த போது கடற்கரைக்கு எதிரிலே என்பது தெரிந்தது. இரவிலும், மறு நாள் காலையிலும் கடற்கரை சென்று நண்பர்களோடு போட்டோ எடுத்த போது சில நாட்கள் இங்கே தங்கியிருக்கலாம் எனத் தோன்றியது.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக