வியாழன், 12 ஜூன், 2025

பூடான், ஏப்ரல், 20/2025

 பூடான், ஏப்ரல், 20/2025

கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளி விட்டு தொடர்வதால், எனது நினைவிலிருப்பவை, பயணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்குமென நம்புகிறேன். காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு வெளியே ஆற்றங்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது இரவு பெய்த மழையின் காரணமாக, களிமண் நிறத்தில் நீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன் ஒருவன் வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தான். மொபைலைக் கொடுத்து என்னை போட்டோ எடுக்கச் சொன்னேன். பிறகு அவனைப் படமெடுத்த போது அவனது கண்களில் மிரட்சி, எதையோ கண்டு அஞ்சுவது போல.
இரண்டு பஸ்களிலும் பயணித்து வளைந்த மலைப்பாதைகளில் பயணம் தொடர்ந்த போது, ரோடெண்டன் பூக்கள் மலைச்சரிவுகளில், சிவப்பு, ரோஸ் என பல வண்ணங்களில் காணப்பட்டன. பொட்டானிகல் கார்டனில் பார்க்க முடியாத பூக்களை இங்கே பார்க்க முடிந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. குழுவில் இருந்த நந்தா என்ற நண்பி பூ ஒன்றை பறித்துத் தரச் சொல்ல, கைடு நம்கே , சட்டெனப் பறித்து அவரிடம் கொடுக்க அவரது தலையை அது அலங்கரித்த பிறகு, பஸ்ஸில் அனைவரது கைகளிலும் வலம் வந்தது. கண்களைக் கவரும் பள்ளத்தாக்குகள் பூடானின் பெருமையும் பாதுகாப்பும் கூட. எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ளாத மற்றொரு நாடு, தாய்லாந்தைப்போல. பாதுகாப்புச் சோதனைகள் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு.
போகும் வழியில் சிறிய கடைவீதி ஒன்றில் பஸ்கள் நிறுத்தப் பட்ட போது ஒரு சிலர் சால்வைகளை வாங்கினர். சமீபத்திய என்னுடைய மற்ற நாட்டு விலைகளை ஒப்பிட்ட போது எல்லாப் பொருட்களும் இங்கு விலை அதிகமே. முக்கியக் காரணம் அனைத்தும் சீனா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதே.
அடுத்த நிறுத்தம் புத்தக் கோயில். இந்தியக் கோயில்கள் போலவே போட்டோக்கள் எடுக்க கோயில்கள் உள்ளே அனுமதியில்லை. நாடெங்கிலும் புத்தர் கோயில்களே. மன்னரை மிகவும் மதிப்பதால் பல இடங்களில் அவரது மற்றும் குடும்பத்தினர் போட்டோவும் காணப்பட்டன. அடுத்த நிறுத்தம் பள்ளத்தாக்கு டிரெக்கிங். சுமார் 4.1 கிமீ நீளப் பள்ளத்தாக்கு, போப்சிகா, சொர்க்கம் போன்றே தோன்றியது. மெதுவாக நடக்க ஆரம்பித்து அனைவரும் முன்னே செல்ல எங்களது ஐந்து பேர் குழு சசிகலாவின் செல்ஃபி மழையில் நனைந்து மெதுவாகச் சென்றது. மரமறுக்கும் தொழிலாளிகள், வயல் வெளி வேலை செய்யும் ஆண், பெண்கள், மிகப் பரந்த பள்ளத்தாக்கு என பிரமாண்ட தோற்றங்களை் ரசித்தபடியே முடிவில் ஓரிடத்தில் அமர்ந்து பள்ளத்தாக்கை இரசித்தபோது நீரோடை பாம்பைப் போல் வளைந்து நெளிந்து அழகான கோலம் போல் காட்சியளித்தது. கடைசியாகச் சென்றதால் தேநீர் அருந்தவும் செல்லாமல் பஸ்ஸில் அமர்ந்தால் போதுமென்று கால்கள் கெஞ்சின.
போகும் வழியில் இருந்த அருவியொன்றின் அருகே அனைவரும் நின்று போட்டோ எடுத்துக் கொண்டதும், மதிய உணவின் போது குளிர் காய இரும்பு அடுப்பொன்றின் அருகே சிலர் போட்டோ எடுத்துக் கொண்டதும், இரவு உணவிற்குப் பிறகு, சந்திரசேகர், வசந்தா தம்பதிகள் திருமண நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டமும் இன்றைய நாளின் மற்றைய முக்கிய நிகழ்வுகள். உணவு சில நேரங்களில் எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும் பெரிது படுத்தாதது குழுவின் சிறப்பு. உம்மென்று இல்லாமல் பேசி அரட்டை அடித்தபடி சென்றதால், களைப்பே தெரியாத மலைப் பாதைப் பயணம். அறுபதைத் தாண்டிய குழுவில் ஒன்று மட்டும் இளைஞி. தன் அம்மாவை கவனித்துக் கொள்ள வந்த குழந்தை.
( தொடருவோம்)
**Bhutan Diary – April 20, 2025**
*Reflections from a Soulful Journey*
Nearly a week has passed since the trip began, and as I continue this travelogue, I trust that what remains vivid in my memory will truly capture the essence of the experience.
After breakfast, I stepped out to sit on a bench by the riverside. The river, swollen and muddy from last night’s rain, rushed past with urgency. A young boy stood nearby, watching curiously. I handed him my phone and asked him to take a picture of me. Later, when I photographed him, I noticed a startled look in his eyes—almost as if he’d seen something that frightened him.
We continued our journey through winding mountain roads, switching between two buses. Along the slopes bloomed wild rhododendrons in shades of red and pink—flowers that we missed to find in the botanical garden. The group was delighted. One of our friends, Nanda, admired a bloom and asked the guide if she could have it. With a swift move, Namgey plucked it and handed it to her. It adorned her hair beautifully and was then passed around the bus, admired by all.
The breathtaking valleys of Bhutan are not just its pride but also a symbol of its serenity and safety. This country, much like Thailand, has remained free from the dominance of any foreign power. The level of security checks here is more intense than in any country I’ve visited.
At one point, our buses stopped near a small roadside market, where some bought shawls. When I compared the prices with those in other countries I’d visited recently, everything seemed costlier here. Understandably so—most goods are imported from countries like China, India, and Bangladesh.
Our next stop was a Buddhist temple. Much like temples in India, photography inside was not allowed. Bhutan is dotted with monasteries, and the people hold their king and his family in great reverence—their photographs are displayed with pride in many places.
The next adventure: a trek through the Phobjikha Valley, stretching 4.1 km long. It felt like a slice of heaven. As the others forged ahead, our little group of five—led by Sasikala’s unrelenting selfies—walked slowly, getting drenched in

கருத்துகள் இல்லை: