வியாழன், 12 ஜூன், 2025

Bali,Indonesia 02/07/24. & 03/07/24

 Bali,Indonesia

02/07/24. & 03/07/24
இலங்கை பயணத்திற்குப் பிறகு வெளிநாட்டுப் பயணம் எதுவுமில்லை. அறுபது வயதுக்கு மேற்பட்ட டிராவலர்ஸ் என்ற அந்தக் குழு மிகப் பெரியதாய் வளர்ந்த போது, ஆர்வம் சற்றே குறைந்தது. மெது மெதுவாய் பாலிக்குப் போகலாம் என்ற குழுவின் விவாதத்தில் ஆர்வம் வந்து பெயரும் கொடுத்து விட்டேன். பலவித டிராவல் ஆர்கணைசர்ஸ் அலசப் பட்டு சங்கர் டிரெக்ஸ் என்ற கைலாஷ் பயண ஏற்பாட்டாளர்கள், கரோனா காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களை நல்ல முறையில் திட்டமிட்டுச் செய்கிறார்கள் எனக் கேள்விப் பட்டு , அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்த போதே மட மட வென அறுபது பெயர்கள் சேர்க்கப் பட்டன. ஏப்ரலில் பிளைட் மற்றும் ஓட்டலும் புக் செய்யப் பட்டது.
ஜூலை 3 முதல் 9 வரை என்ற பயணத்தேதிகள் முடிவும் செய்யப் பட்டன. ஆனால் நான் மட்டும் 12ந்தேதி திரும்ப முடிவு செய்து அறையும் , பிளைட் டிக்கெட்டும் மாற்றப் பட்டன.
ஜூலை இரண்டு ஓலா டாக்ஸியில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்தாயிற்று. போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேசன், பாதுகாப்பு சோதனை முடித்த போது 12 50am பிளைட் 1 30amக்குப் போகும் எனத் தகவல். கிடைத்த விலை மிகுந்த பர்கர் ஒன்றைச் சாப்பிட்டு C1 கேட் வந்து காத்திருந்த போது, மேலும் லேட் எனத் தகவல். ஒரு வழியாக இரண்டு மணிக்கு விண்ணில் பறந்த விமானம் 37000 அடி உயரத்தில் ஆறு மணி நாற்பது நிமிடங்கள் கழித்துத் தரையிறங்குமென.அறிவித்த கேப்டன் மீண்டும் தனது குரலை தரையிறங்கும் அறிவிப்பில் குரல் கொடுத்தார். மேக மூட்டங்களில் அடிக்கடி குலுங்கி தூக்கம் சரியில்லாத இரவு கடந்து தரை இறங்கிய்போது,( மணி 8 45 am இந்திய நேரம்) மணி 11.15am. Customs , visa on arrival முடிந்து, அனைவரின் லக்கேஜூம் கையில் கிடைத்து முதல் 32 பேர் கொண்ட பஸ் கிளம்பி, கடலின் back waters மேல் அமைக்கப் பட்ட பாலத்தைக் கடந்து, நெடுஞ் சாலையில் பத்தடிக்கு ஒரு சிக்னல், குறுகலான சாலைகளைக் கடந்தபோது பழமையான நகரமே கண் முன்னே விரிந்தது. மகாபாரத, இராமயணக் காட்சிகளின் பல் சிலைகளைக் காண முடிந்தது. பழமை மாறாத கட்டிடங்கள அடுக்கு மாடிகள் இல்லை, இராஜஸதானின் ஜெய்ப்பூர் நினைவு வந்தது. இந்தியாவின் மற்றொரு நகரம் போல, பெயர்ப் பலகைகள் தான் வேறுநாடு எனச் சொன்னது.
மதிய உணவுக்கு Queens of India என்ற இந்திய உணவகத்தில் நின்றபோதி, பசிக்கு அருமையான இந்திய உணவு கிடைத்தது. மீண்டும் பயணித்து் Royal Casa Ganesha Resort அடைந்த போது அழகான பசுமைத் தோற்றம் கொண்ட சுற்றுப் புறம் கண்ணுக்கு இனிமை. அறையை அடைந்து குளியல் போட்டு் Batik ( Milinda) airlines குழு வரவுக்குக் காத்திருந்த போது ஏழு மணியாகி விட்டது. திட்டமிட்டபடி இனி எங்கும் போக முடியாது என்பதால், இரவு உணவுக்கு Ubut அரண்மனைக்கு எதிரில் உள்ள Queen's of India உணவகத்தில் இரவு உணவு முடித்து, ரிசார்ட் திரும்பிய போது, லோகல் நேரம் பத்தைக் கடந்து இருந்தது.முன்னதாக இந்தோனேசிய பணமாற்றம் செய்தபோது நூறு US டாலருக்கு 16,12,500 இந்தோனேசிய ருப்பையா கிடைத்தன. ஒரு காப்பி விலை 30000 இந்தோனேசிய ருப்பையா என்பதால் கணக்குப் புலிகள் சரியாக விடை சொல்லுங்கள் , பார்ப்போம், நாளை சந்திப்போம்
( தொடரும்)

கருத்துகள் இல்லை: