வியாழன், 12 ஜூன், 2025

அன்னை உறவே

 மெல்லத் தேய்ந்த தேகம்

சொல்லத் தெரியாத பாசம்
எல்லை இல்லாத அன்பு
இல்லை ஈடான உள்ளம்
கருணையே உருவான தெய்வம்
வருமோ மழலைப் பருவம்
மீண்டும் அவள் மடியில்
ஆண்டுகள் பலவும் அவளோடு
அணைக்க அவளின் கரங்கள்
இணையற்ற அன்னை உறவே

கருத்துகள் இல்லை: