உடுக்கைக்கு இடை அழகு
உரலுக்கு உலக்கை அழகு
கண்ணுக்கு மை அழகு
கடலுக்கு அலை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
சொல்லுக்குப் பொருள் அழகு
பல்லுக்கு வெண்மை அழகு
மானுக்குக் கொம்பு அழகு
மாலைக்கு மலர்கள் அழகு
வானுக்கு நிலவு அழகு
வாசலுக்குக் கோலம் அழகு
வயலுக்குப் பசுமை அழகு
வயதுக்கு இளமை அழகு
பாடலுக்கு இசை அழகு
ஆடலுக்குப் பெண்மை அழகு
மானிடர்க்கு மனிதம் அழகு
மாதர்க்கு நளினம் அழகு
அவனுக்கு அவள் அழகு
அன்னைக்குப் பாசம் அழகு
அழகென்ற சொல்லே அழகு
அதனோடு இணைந்து பழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக