ஆண்டுக்கு ஒருமுறை தவறாது வருவேன்
மீண்டும் மீண்டும் திரண்டு வருவேன்
வேண்டிய அளவுக்கு மேலும் தருவேன்
தூண்டிய காற்றை சுழற்றி அடிப்பேன்
வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவேன்
கடிவாளம் எனக்கு இல்லை என்றும்
இடித்தும் பார்ப்பேன் இரும்பின் உறுதியை
ஆற்றினை ஏரியை ஒளித்து வைத்தாயா
சீற்றம் கொண்ட பாதையில் தெரியுமே
அழிப்பது எனது ஆர்வம் இல்லை
அறிவுக்கு வேலையை அளித்துச் செல்வதே
விழித்திடு விரைந்து் செயல் படு
விளையாது பேரழிவு விடியும் வேளையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக