வியாழன், 12 ஜூன், 2025

நாளைய விடியல்

 இயற்கை எனை ஆரத் தழுவினாயோ

இத்தனை சுகம் உனக்குத் தந்தேனோ
இன்பமுற்று நீயிருக்க என்னால் இயன்றதே
இனியாவது அமைதி கொண்டு உறங்குவாயா
கண்கள் இமைமூட ஓய்வெடு அழகாக
நாளைய விடியல் நல்லதாய் அமையும்
நானும் நீயும் மகிழ்வோம் உறுதியாக !

கருத்துகள் இல்லை: