வியாழன், 12 ஜூன், 2025

நட்பும் தொடர்கதை தான்

 உறவுகள் மட்டுமல்ல நட்பும் தொடர்கதை தான். நட்பில்லாத தனிமை நரகத்திற்கு ஒப்பானது. ECR லிருந்து கிளம்பிய கார் இராஜரத்தினத்தை கிண்டியில் இறக்கிய பிறகு ஷெனாய்நகரில் புக் செய்திருந்த தங்கும் விடுதிக்கு கூகுள் தங்கை தமிழில் வித்தியாசமாக வழி காட்டியதைக் கேட்டு, திரு வி க பூங்காவுக்கு அருகில் கண்டு பிடித்து அடைந்த போது நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது.

நண்பர்கள் குணா மற்றும் அசோக் அறைக்கு வந்து அளவளாவிக் கொண்டுருந்தனர். மறுநாள் காலை MMM உடல் நலப் பரிசோதனைக்கு இராஜனிடம் அனுமதி பெற்றிருந்தேன். மாலை ஆறரைக்கு Anna Alumni Club கல்லூரி வகுப்புத் தோழர்களுடன் மீட்டிங் என்பதால் அதற்கு முன்பே வரதராஜன் அறைக்கு வந்தான். எதிர்கால வைப்புக்கான ஆவன செய்து முடித்து அனைவரும் அறையிலிருந்து கிளம்பி அடையாற்றின் கரையை அடைந்து , நணபர்கள் ஆனந்த் மற்றும் கபீர் ஏற்பாடு செய்திருந்த எட்டு பேர் குழுமத்தில் ஐக்யமானோம்.
நண்பர்கள் கூடினால் கேட்க வேண்டுமா, கேலியும் கிண்டலும் அளவில்லை. நடுநடுவே CEG 79 நண்பர்களின் நன்கொடை சேமிப்பை ஏழை மமாணவர்களுக்கு எவ்வாறு கல்வித் தொகையாகக் கொடுக்கலாம் என்ற விவாதமும் நடந்தது. அதற்கான criteria குழுவில் முடிவு செய்து AACEG தலைமை மேற்பார்வையில் , ஆண்டு தோறும் வரும் வட்டித் தொகையை பகிர்ந்தளிப்பது என்பதாக .
சிற்றுண்டி, கல் தோசை வயிற்றை நிரப்ப, அனைவரும் விடை பெற்று, சிவா மற்றும் கபீரை வரும் வழியில் இறக்கி விட்டு அறைக்கு வந்து மறுநாள் காலை மருத்துவ மனை செல்ல வேண்டுமென்பதால் உறங்கியாயிற்று.
காலையில் இராஜனை அவனது அறையில் சந்தித்த பிறகு,, அவனது கட்டளைக்கிணங்க ஒருவர் என்னுடன் கூடவே இருந்து ECHO மற்றும் ECG விரைவில் முடிக்க உதவினார். பெருங்கூட்டம் எப்போதும் போல இன்றும். Cardiologist உடல் எடை குறைப்பது பற்றியும் மாத்திரைகள் சிலவற்றை மாற்றியும் எழுதித் தந்த பிறகு, இராஜனை மறுபடி சந்தித்து, salt மற்றும் protein அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்ற அறிவுரையோடு அங்கிருந்து கிளம்பும் முன், முன்னதாகப் பேசியபடி மாலை 5 45 Skywalk ,வாழை படத்திற்கு ஆன்லைனில் புக் செய்து, நண்பர்கள் குணா, அந்தோணி இருவரையும் தியேட்டரில் சந்திப்பதாகச் சொல்லி, மதிய உணவு முடித்து அறையில் ஓய்வெடுத்த பிறகு, தியேட்டருக்குச் சென்றபோது, புது விதமான அனுபவம்.
திட்டமிட்டபடி படத்தை திரையிட இயலாமல் தொழில் நுட்பக் கோளாறு என அறிவித்ததால் பெரும் வாக்குவாதங்கள். புக் செய்த பணம் திரும்பத் தரப்படும் என்று அறிவித்த நிர்வாகம்,்எங்களையும் மற்றும் சிலரையும் GOAT படம் பார்க்க அனுமதித்தது. நான் இரண்டாம் முறை பாரப்பதால் நடு நடுவே உறக்கம்.
காட்சி முடிந்து இரவு உணவை அண்ணாநகரில் முடித்து, மறு நாள் சென்னைக்கு அருகில் உள்ள அருவி ஒன்றுக்குப் போகலாம் என தீர்மானித்தோம். நினைப்பது ஒன்று நடப்பது வேறு எனபதை அடுத்த தொடரில் காண்போம்
( தொடரும்)
No photo description available.
All reactions:
Prasad Gupta Doolapeta, Tut Teja and 11 others

கருத்துகள் இல்லை: