பூடான் - ஏப்ரல் 16,2025
மற்றுமொரு திட்டமிட்ட பயணம். கம்போடிய வியட்னாம் சுற்றுலா ஆரம்பிக்கும் முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒன்று.
ஏப்ரல் பதினாறு காலை 8 15க்கு விமானப் புறப்பாடு. பேக்கிங் ஒரு வாரத்திற்கு முன்பே. விடியற்காலை 3 50க்கு அலாரம் வைத்தாலும், முன்பே முழித்து அலாரத்தை ஆஃப் செய்து, எழுந்து தயாரான போது,காலை 4 45 ஆகியிருந்தது. முன்னதாக புக் செய்த டாக்சி, இரவே வந்து தங்கி மெசேஜ் செய்திருந்தான்.
புறப்பட்டு ஆறே காலுக்கே விமான நிலையம் அடைந்தபோது, நன்றாக விடிந்திருந்தது. செக் இன் செய்து, செக்யூரிட்டி முடித்து, கேட் 38 க்கு நீண்ட தூரம் நடந்து சேர்ந்தபோது ஏழு மணி ஆகியிருந்தது. முந்தைய நாள் இரவு ஆர்டர் செய்து வாங்கியிருந்த பன் பட்டர் ஜாமோடு, காபி ஒன்றை கொள்ளை விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு, ஏழரை மணிக்கு, போர்டிங் அழைப்பை ஏற்று விமானத்தில் அமர்ந்த போது, அறுபது பிளஸ் குழுவின் தெரிந்த தெரியாத முகங்களின் விசாரிப்பு.
சரியான நேரத்தில் புறப்பட்ட விமானம், பைலட்டின் அறிவிப்போடு வானில் உயர்ந்து, இரண்டரை மணி நேரப் பயணத்தில், பக்டோக்ரா என்ற மேற்கு வங்க சிலிகுரி நகர டிபென்ஸ் விமான நிலையத்தை இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே அடைந்து, சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், விமான நிலையம் உள்ளே நுழைந்து, லக்கேஜ் கலெக்ட் செய்து வெளிவந்த போது, கார்கள் முழுவதுமாக நடப்பதற்கு வழி இல்லாமல். ஒரு வழியாக டிடியை அடைந்து, லக்கேஜோடு எங்களையும் அடைத்து, கொளுத்திய வெயிலில், வியர்த்து, வண்டி புறப்பட்டு, நெடுஞ்சாலை அடைந்து, கால்வாய் நீரோட்டம் கடந்து வறண்ட ஆறொன்றைக் கடந்து, மதிய உணவுக்கான ஓட்டலில் நின்றது. பஃபே உணவு ருசியாகவே இருந்தது. மீண்டும் பயணித்த போது NH 27 சாலையின் இருபுறமும் தேயிலைத் தோட்டங்கள், அவ்வப்போது வறண்ட ஆறு என வேகமெடுத்து பயணம் தொடர்ந்தது.
தேயிலைச் செடிகள் குள்ளமாகவும், இலைகள் சிறியதாகவும் காணப்பட்டன. தேநீர் இடைவேளை நிறுத்தத்திற்குப் பின் இந்தோ பூடான் எல்லையைத் தொட்டபோது மாலை ஐந்தரை ஆகியிருந்தது. இமிக்ரேஷன் அலுவலக பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்குப் பின் வெளிவந்து, போட்டோக்கள் எடுத்து முடித்து, பூடான் கைடுகள் வழிகாட்ட, ஓட்டல் லோட்டஸ் அடைந்து, அறையை நண்பர் இராஜேந்திர ஜோஷியோடு பகிர்ந்து, குளியல் போட்டு, உடைமாற்றி, வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்ற போது, கடைகள் போன்ற எதுவும் தென்படாததால், ஓட்டலுக்குத் திரும்பி, இரவு உணவை முடித்து அறைக்குத் திரும்பி, ஒன்பதரை மணிக்கே உறங்கப் போனாலும், காலை மூன்றே காலுக்கே விழிப்பு வந்து உறக்கம் வராமல் இத்தொடரை மொபைலில் பதிவு செய்து முடித்தபோது விடியற்காலை ஐந்து மணி. இந்திய நேரத்தை விட அரை மணி கூடுதல் பூடானில். மலை அடிவாரத்தில் இந்த ஓட் டல் காலை உணவுக்குப் பிறகு மலையேறத் துவங்குவோம்.
( தொடருவோம்)
[17/04, 05:52] N A Vijayan: **Bhutan - April 16, 2025**
Another planned journey. This one was booked even before the Cambodia-Vietnam tour began.
The packing was done a week earlier. Although I set the alarm for 3:50 AM, I had already woken up before the alarm rang, switched it off, and got ready. By the time I was up and prepared, it was already 4:45 AM. The taxi I had pre-booked had arrived early and the driver sent me a message.
By 6:00 AM, I had reached the airport. It was a pleasant morning. After checking in, clearing security, and walking a long distance to gate 38, it was 7:00 AM. I had ordered a bun with butter and jam the night before, and after paying an exorbitant price for coffee at Coffee Shop, I sat down to have breakfast. At 7:30 AM, I responded to the boarding call and took my seat on the plane, surrounded by familiar and unfamiliar faces in the group of 60+.
The flight departed on time, at 8 15am, and with the pilot's announcement, it ascended into the sky. After a two-and-a-half-hour journey, we arrived at Bagdogra, the defense airport in Siliguri, West Bengal, twenty minutes ahead of schedule. After a short wait, we entered the terminal, collected our luggage, and when we emerged, cars were lined up without any room to move. We made our way through a narrow path, and in the scorching heat, with sweat pouring down, we got into a TT. The drive continued as we passed over dry riverbeds, crossed a highway, and finally stopped at a restaurant for lunch. The buffet was quite delicious.
As we continued our journey, tea gardens lined both sides of NH 27, and every now and then, we passed dry riverbeds. The journey sped on.
The tea plants appeared stunted, with small leaves. After a brief tea break, we reached the India-Bhutan border at around 5:30 PM. After completing the passport verification at the immigration office, we stepped out, took a few photos, and followed the Bhutanese guides, reaching the Lotus Hotel. I shared a room with my friend Rajendra Joshi, took a shower, changed clothes, and stepped outside. After walking for a bit, we noticed there were no shops nearby, so returned to the hotel. After dinner, we returned to our room and went to bed by 9:00 PM. However, I woke up at 3:00 AM and couldn’t fall asleep. So, I spent the time recording this on my mobile. It was 5:00 AM when I finished. Bhutan is half an hour ahead of Indian Standard Time. After breakfast at this hotel at the foot of the mountains, we will begin our ascent towards Thimpu..
(To be continued...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக