வியாழன், 12 ஜூன், 2025

மறைந்த உறக்கம்

 தெரிவதும் அறிவதும்

தெரிந்தே தெளிவதும்
வருவதும் போவதும்
வாழ்க்கைத் தத்துவம்
எங்கோ தொடங்கி
எங்கே முடியுமோ
கேள்விக் கணைகள்
கேட்பவர் ஆயிரம்
வளைந்தும் நெளிந்தும்
வட்டப்பாதை வாழ்க்கையாவது
பசும்புல் வெளிப்பாதை
பக்கத்தே ஆறுகுளம்
மஞ்சம்புல் வீட்டுக்கூரை
மந்தையில் ஆடுகள்
காளைகள் பூட்டிய
ஏர்க்காலில் சகதி
மாறிய காட்சிகள்
மாடிவீடு் தார்ச்சாலை
மச்சுவீடு மங்களூர்ஓடு
வாகனம் பலவும்வந்தே
மறைந்த உறக்கம்
மாத்திரை தேடுது !

கருத்துகள் இல்லை: