கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 17/2/25
காலை அட்டவணைப் படி Taichi என இருந்தது, நணபர்கள் யாரும் சென்றனரா தெரியவில்லை. காலையுணவு முடித்து படகில் ஏறி, படகுத்துறை அடைந்து அங்கே இருந்த பேருந்தில் முப்பது நிமிட மலைப் பாதை வழியாக பயணம். அழகான காட்சிகளை இரசித்தபடி சென்று Cat Ba island ல் உள்ள மலைக்குகைக்குச் செல்லும் படிகளின் அருகில் இறக்கி விடப் பட்டோம். சிலர் பேருந்திலே தங்கி விட்டனர். நானும் முதலில் படியேறிச் செல்லத்தயங்கி பிறகு மற்ற குழுவினரோடு கலந்து கொண்டேன்.
படியேறி உயரச் சென்ற போதே அறிந்தேன் தவிர்க்கக் கூடாத குகை என்று. Lime stone பாறைகளால் ஆன குகை அது, ஆங்காங்கே பாறையின் கூர்மைப் பகுதி தொங்கியபடி. கவனமாக நடக்க வேண்டுமென அறிந்து, சில இடங்களில் குனிந்தும் வளைந்தும் சென்றபோது மிக அழகான தோற்றம். ஆந்திராவில் உள்ள Bhelum caves உடன் ஒப்பிட முடியாது எனினும் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் அழகூட்டியது. ஒரு புறம் நுழைந்து மறுபுறம் படியிறங்கி வெளியே வந்தோம்.
காத்திருந்த பேருந்தில் ஏறி, படகுத்துறை மீண்டும் வந்து, படகில பயணித்து கப்பலுக்கு வந்த போது மதிய உணவு ஒன்பதரைக்கே என்றும் பத்தரைக்கு கப்பலில் இருந்து விடை பெற வேண்டுமென்றும் அறிவித்தனர். கிடைத்த உணவை முடித்து மீண்டும் படகில் பயணித்துக் கரையை அடைந்த்போது மனதில் சிறிய வருத்தம் அழகான இயற்கை் தோற்றம் விட்டுச் செல்கிறோம் என்று.
மீண்டும் பயனித்து மிகப் பெரிய ஏரியின் நடுவில் உள்ள கோயிலுக்குச் சென்று, உயர்ந்த பென்சில் கோபுரத்தைக் கண்ணுற்று , போட்டோக்கள் கிளிக்கிய பிறகு, குழுவினர் , ஏரிக்கரை கடைகளில் கிடைத்த அனைத்தையும் வாங்கிக் குவித்தனர். மாலை நேரமானதால், அங்கிருந்த பாலம் சிவப்பு நிற வண்ண விளக்குகளில் ஒளிர்ந்தது.
Ho Chi min என்ற வியட்னாமிய வளர்ச்சியில் முக்கிய பங்கேற்ற தலைவரின் உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் War Museum விளக்கொளியில் பார்வையிட்ட போது அவர்களது நாட்டுப் பற்றின் பரிமாணம் தெரிந்தது.
நேராக Water Puppet Show நுழைவுச் சீட்டு பெற்று உள்ளே நுழைந்த போது அரங்கம் நிறைந்திருந்தது. பொம்மலாட்டம் புது விதமாக நீரில் பல வித உருவ பொம்மைகள் வலம் வந்தன. கதையொன்று, நாட்டின் வளர்ச்சி பற்றியது சிறுவர்கள் பாரப்பது போன்று பார்த்து முடித்து, இரவு உணவு முடித்து ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் மீண்டும் ஷாப்பிங். இப்பயணத்தில் ஷாப்பிங் ஒரு முக்கிய அங்கமாக மாறிப் போயிற்று.
(தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக