வியாழன், 12 ஜூன், 2025

மாற்றம் வரும்

 அவரவர் வினையை அவரவர் செய்வது நலமே

அவசர உலகின் ஆணிவேர் கடமை ஆற்றலே
செவ்வனே செய்த செயலின் தீர்ப்பு விரைவில்
செம்புலப் பெயல் நீராய் நட்பு தொடரும்
பருவத்தே மழை பெய்யும் வளம் கூட்டும்
அருவமாய் இறைவன் உம்மையும் எம்மையும் காப்பான்
சுட்டாலும் கதிரோன் உயிர் காப்பான் தினமும்
நாட்டினர் நலம் வாழவே தலைவன் வருவான்
கூட்டுப் பறவை இரைதேடி குஞ்சுக்காய் பறக்கும்
வேட்டுச் சத்தம் தொலை தூரத்தே முழங்கும்
மாற்றம் வரும் மனிதம் தழைத்து நிமிரும்
கூற்றுவன் புரவி ஏறிப் புறப்பட்டு விட்டான்
உண்மை என்றும் உயர்ந்து நிற்கும் ஒருநாளில்
பொய்மை பொசுங்கிச் சாம்பலாய் மறைந்து போகும்

கருத்துகள் இல்லை: