வியாழன், 12 ஜூன், 2025

காணாமல் போனதுவே

 தேமதுரத் தமிழோசை தெருவெங்கும் கேட்குது

தேனிசைப் பாடலொன்று தெற்குத் தெருவினிலே
காளையது தலையசைத்து மணிச் சத்தம்
காலையது விடிந்த கட்டியம் கூறியது
தெருவெங்கும் மாக்கோலம் பெண்டிரின் கைவண்ணம்
பருவமங்கை வனப்போடு வண்ணக் கோலங்கள்
கோயில் ஒலிப்பானில் விநாயகர் அழைப்பு
கோவணச் சிறுவர் கூக்குரல் சத்தம்
ஆற்றுக் கால்வாயில் அத்தனை சிறுசுகள்
ஆடலோடு பாடலும் அமர்க்கள ஆரப்பரிப்பு
தெருமுனை தேநீர்க்கடை பெரியவர் கூட்டம்
உருப்படியாய் சிலநேரம் விவாதம் உண்டங்கு
காலச்சக்கரம் உருண்டோடி காட்சிகள் மாறியது
காணாமல் போனதுவே இத்தனையும் இல்லாமல்

கருத்துகள் இல்லை: