வியாழன், 12 ஜூன், 2025

கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 14/2/25 & 15/2/25

 கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 14/2/25 & 15/2/25

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, பேருந்தில் Floating Village போவதற்கான நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் இறங்கி, நுழைவுச் சீட்டைப் பெற்று, படகில் கீழடுக்கு, மேலடுக்கு இரண்டாகப் பிரிந்து அமர்ந்த பின், ,Tonle Sap Lake என்ற மிகப் பெரிய கிளீன வாட்டர் ( சேற்று நிறம்) ஏரியில் பயணித்த போது ஏதோ கடலின் நடுவே வந்தது போன்ற மிகப் பெரிய ஏரி. மக்கள் படகிலே வீடுகள் அமைத்துத் தங்கியிருந்தனர். படகிலே பள்ளிக் கூடம், காவல் நிலையம், மளிகைக் கடைகள் என பலவும். இப்போது புரிந்தது நீரின் மேல் அமைந்த கிராமம் அதுவென்று. ஓரிடத்தில் இறக்கிவிடப்பட்டபோது இது மிதக்கும் ரெஸ்டாரெண்ட் எனத் தெரிந்தது.
படகின் அடித்தளத்தில், முதலைகள் படுத்திருந்தன. சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கரை சேர்ந்து மதிய உணவுக்குப் பிறகு, அவரவர் விருப்பப் படி ஷாப்பிங் செல்லலாம் என்றதால் அனைவரும் அறைகளுக்குத் திரும்பி ஓய்வெடுத்த பிறகு, மாலையில் புறப்பட்டு நணபர்களுடன் ( பஞ்ச பாண்டவர் என பெயர் சூட்டப் பட்டோம்) நினைவுப் பொருட்களை வாங்கிய பிறகு, இரவு உணவுக்குத் தயாரானோம்.
நேரமிருந்ததால் மீண்டும் Pub Street போவதென் முடிவெடுத்து, சிறு குழுக்களாக, பெண்கள் உட்பட, நடந்து பார்வையிட்டு ஓட்டலை அடைந்து, மறுநாள் பயணத்திற்குத் தயாரானோம்.
மறுநாள் காலை மீண்டும் Killing field விசிட், சிலர் பேருந்திலே ஓய்வு. போர் நினைவுச் சின்ன வளாகம் ஒன்றிற்கும் சென்று போட்டோக்கள் எடுத்த பிறகு Artisan எனச் சொல்லப் படும் கைவினைப் பொருட்கள் செய்யும் வளாகத்திற்குள் நுழைந்து ஒவ்வொன்றாய் பார்வையிட்டு, விலை வாங்கும் உயரத்தில் இல்லாததால், வெளியேறி Siem Reap விமான நிலையம் அடைந்து கம்போடிய நாட்டிற்கு bye bye சொல்லி, Hanoi , Vietnam செல்லும் விமானத்திற்குக் காத்திருந்து, உயரே பறந்து Nai Bai சர்வதேச விமான நிலையம் அடைந்த போது வெப்ப நிலை மாறுபட்டிருந்தது. மறுநாள் செல்ல வேண்டிய உலகப் புகழ் பெற்ற Halong Bay நினைவுகளோடு அன்றைய இரவு கழிந்தது.
( தொடரும் சுற்றுலா)
All reactions:
Prasad Gupta Doolapeta, Bethany Webster and 4 others

கருத்துகள் இல்லை: