வியாழன், 12 ஜூன், 2025

பூடான் - ஏப்ரல், 17/2025

 பூடான் - ஏப்ரல், 17/2025

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு சட்டம். இன்றைய நாள் பூடான் இமிக்ரேஷனில் ஆரம்பித்தது. இ-பெர்மிட் பிரிண்ட் அவுட் கட்டாயம் என்பதால் அனைவரும் பாஸ்போர்ட்டுடன் இணைத்து டோக்கன் முறைப்படி வரிசையில் நின்று, ஸ்டாம்பிங் பெற அரை மணிக்கு மேல் ஆனது.
திம்பு, பூடானின் தலைநகரம் நோக்கிப் பயணம். மலை ஏற்றம் தொடங்கியதுமே அடர்த்தியான பனிமூட்டம், அழகான மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் பனிப் போர்வையில் மறைந்தபடி. சுமார் இரண்டு மணி நேரம் பயணம் இவ்வாறே. பயணப் பாதையில் வரும் இடங்களைப் பார்த்தவாறே பயணிப்பது என்பு முன்பே திட்டமிடப் பட்டிருந்தது.
இரண்டு இடங்களில் பாஸ்போர்ட் காவலர்களால் சரி பார்க்கப்பட்டது. முதல் தேநீர் இடைவேளை நிறுத்தம் ஒரு பள்ளத்தாக்கை ஒட்டி. தூரத்தே சுக்கா அணை ஒன்றும் தெரிந்தது. ஊர்களின் பெயர்கள் நினைவில் வைத்துக் கொள்வதே கடினம். அருகிலே ஸ்தூபா என்ற தூண்கள் வடிவில் புத்தர் சிலைகள் உள் வைக்கப் பட்டிருந்தன. பூடான் கைட்கள் வரவேற்பு வெண்ணிற சால்வைகள் அணிவித்து அனைவருடனும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
மதிய உணவுக்கு இரண்டு மினி பஸ்களும் நிறுத்தப் பட்டு, இருக்கும் இடங்களில் அமர்ந்து கிடைத்த உணவை சாப்பிட்டுக் கிளம்பினோம். பெரும்பாலும் இந்திய முறைப்படி உணவே. நான்கு பேர் மட்டும் ஜெயின் முறைப்படி தயாரித்த உணவை உட்கொண்டனர். மீண்டும் பயணித்து அடுத்த நிறுத்தம், உயரே இருந்து கொட்டிய மிதமான நீர் வீழ்ச்சி. இம்மலைப் பிரதேச சிறு நதிகள் அனைத்தும் சேர்கிற இடம் பிரம்மபுத்ரா என கைட் அறிவித்தார்.
அடுத்த நிறுத்தம் இரு ஆறுகளின் சஙகமம். இங்கே திம்பு மற்றும் பரோ நகரங்களின் வழிகள் பிரிந்தன. போட்டோக்கள் சங்கம பிரிட்ஜ், திம்பு நுழைவாயில் இரண்டையும் எடுத்த பிறகு திம்புவை நோக்கிப் பயணம்.
திம்புவை அடைந்தபோது மாலை ஐந்தரை. சுமார் எட்டுமணி நேரப் பயணம். 22 இருக்கை பஸ் ஆனாலும் குறைந்த உயர இருக்கைகள் கால்களை மடக்கி உட்காரவைத்து சிறிது அசௌகரியமாகவே இருந்தது.
ஓட்டல் Magmar அடைந்து, அறை எண் 204 ல் குளியல் முடித்து, வெளியே வந்து கடைகளில் ஏறி இறங்கியபோது, பெரும்பாலும் சைனா பொருட்களே, எதுவும் வாங்காமல், ஓட்டலுக் குத் திரும்பி இரவு உணவு முடித்து, நண்பர் இராஜேந்தரோடு திரும்பினோம்.
நேர்த்தியான சாலைகள், நெருக்கமற்ற வரிசை மாறாத ஒழுங்கு முறை வாகனங்கள், சிறிய நாடானாலும் சட்டத்தை மதிக்கும் நற்பண்பு குறிப்பிடத் தக்கவை.
நாளை திம்பு நகர்வலம் காலை ஒன்பதுக்குத் துவங்கும் என்ற அறிவுப்போடு நாள் நிறைவு பெற்றது.
( தொடருவோம்)
Bhutan Diaries – April 17, 2025
Every country has its own rules. Our day began at the Bhutan immigration office. Since a printed e-permit was mandatory, everyone had to stand in a token-based queue with their passports. It took over half an hour to complete the stamping process.
Our journey then moved towards Thimphu, the capital of Bhutan. As the ascent into the mountains began, we were greeted by thick mist covered peaks and valleys, creating a magical atmosphere. The two-hour journey was spent admiring the scenic beauty along the route – something that was planned in advance.
At two different checkpoints, our passports were verified by security personnel. Our first tea break was by a valley, from where we spotted a distant dam named Chukha. Remembering the names of all the towns we passed was quite a task! Nearby, we saw several stupas, with Buddha statues housed inside pillar-like structures. Bhutanese guides welcomed us with traditional white scarves and took photos with all of us.
For lunch, our two minibuses stopped at a designated area. We sat wherever seats were available and had the meals provided – mostly Indian-style food. Only four of the group had specially prepared Jain meals. After lunch, we resumed our journey, stopping next at a spot with a gentle waterfall cascading from above. The guide mentioned that all the small rivers from this hilly region eventually join the Brahmaputra.
Our next halt was at a confluence of two rivers – the point where the roads to Thimphu and Paro diverge. After taking some photos near the “Sangam Bridge” and Thimphu’s entrance gate, we continued our journey to the capital.
We reached Thimphu around 5:30 PM, after nearly eight hours of travel. Although we had a 22-seater bus, the low seat height made it a bit uncomfortable to sit with our legs folded for so long.
Once we arrived at Hotel Magmar, I checked into Room 204, freshened up, and stepped out to explore the local shops. Most of the items were Chinese goods, so I returned empty-handed. After dinner at the hotel, I went for a walk with my friend Rajendhar and called it a day.
Bhutan is a small country, but the discipline on the roads, the orderly flow of traffic, and the respect for law stood out as noteworthy traits.
With the announcement that the Thimphu city tour would begin at 9 AM the next morning, our day came to an end.
To be continued.

கருத்துகள் இல்லை: