அயலகப் பயணம், சிங்கப்பூர் & தாய்லாந்து, 15/11/24, 16/11/24
வெளிநாட்டு கரன்சி, USD in particular, வாங்கும்போநு 100 USD ஆக வாங்குங்கள், குறைவான மதிப்புள்ள டாலருக்கு், குறைவான மதிப்புள்ள அந்நாட்டு கரன்சியே கிடைக்கும் உதாரணமாக ஒரு டாலர் மதிப்புக்கு 34 Bhat , 32.40 Bhat என வேறுபடுகிறது.்நினைவுப் பரிசுகளை சாதாரண கடை வீதிகளில் வாங்குவது நல்லது, சுற்றுலாத் தளங்களில் அல்ல.
இன்று முழுவதுமாக ஓய்வாதலால் காலையில் கடை்வீதியைச் சுற்றி வந்து், சில பொருட்களை வாங்கிய போது, விமானத்தில் செக் இன் செய்வதில் 20 kg என்ற அளவு ஞாபகம் வந்தது. இப்போதெல்லாம், இருக்கை, உணவு, எடை என எல்லாவற்றுக்கும் சார்ஜ் செயகிறார்கள். சைனா டவுனில் வாங்கியது போதும் என்றிருந்தேன் இருந்தாலும், அவ்வப்போது் சிறிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தேன்.
ஓய்வாதலால் நடையைக் குறைத்து, கால் மசாஜ் செய்து, சிறிது தூரம் நடந்து, மதிய உணவையும் முடித்து ஓய்வெடுத்து, மாலை ஐந்து மணிக்குக் காத்திருந்தேன்.
மாலை ஐந்தே காலுக்கு பிக் அப் வேன் வந்தது, ஒவ்வொருவராக பிக் அப் செய்து சுமார் அரை மணி நேரம் பயனித்து, எங்களை இறக்கிவிட்டு பத்தரை மணிக்கு மூன்றாம் தளத்திற்கு வர வேண்டுமெனக் கூறி டிரைவர் சென்று விட்டார்.
Fantasea என்ற மாய உலகத்தில் நுழைய அனுமதிச் சீட்டு பெற்று வாசலை அடைந்த போதே இது ஒரு fantasy உலகம் என சிலைகளும், கொட்டிய செயற்கை அருவியும், தோட்டமும் பறை சாற்றின. இம்முறை selfie stick with tripod அமைப்போடு இருந்ததால், போட்டோ, வீடியோ எடுக்க உதவி் கேட்க அவசியமில்லாமல் போயிற்று.
ஒவ்வொன்றாக மாய உலகத்தைப் பாரத்தபடி செல்ல, வியாபார நுணுக்கம் கொடி கட்டிப் பறந்தது.விலை அதிகமாதலால், வாங்குபவர்களை விட பார்த்துச் சென்றவர்களே அதிகம். கோட்டையைப் போன்றே, அகழி, வாயில் இருந்த இடமே ஒன்பது மணிக்கு நடந்த உள்ளரங்கமாக மாறியது. சிறியவர், பெரியவர் விளையாட பந்து எறிதல், பலூன் உடைத்தல், துப்பாக்கி சுடுதல், வளையம் எறிதல் என பலவும். நானும் கலந்து் கொண்டு் இரண்டு் துணி் பொம்மைகளைப் பரிசாகப் பெற்றேன்.
வெவ்வேறு கோணங்களில் படமெடுத்தபடி பிரமாண்டங்களை இரசித்தபடி சென்ற போது் யானைகளை வரிசையாக நிறுத்தி இருந்தனர். நூறு Bhatக்கு கூடை நிறைய வாழைப்பழமும், கரும்புத் துண்டுகளும் கொடுத்தனர். அதை வாங்கி ஒவ்வொரு யானைக்கும் கொடுத்தபடி போக, தும்பிக்கையை நீட்டி எனக்கு. இன்னும் கொடு என்று கேட்டது. முன்னதாக செட் செய்த மொபைல் கேமிராவில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்தது.்
அங்கிருந்து் நகர்ந்து் சிறிது நேர ஓய்வுக்குப் பின் தங்க நிற அரண்மனைக்குப் பின்புறம் மூன்று பகுதிகளாப் பிரிக்கப் பட்ட சாப்பாட்டுக் கூடம் பெரிய அரண்மனை உள்ளே இருப்பது போன்றே. டேபிள் எண் குறித்துக் கொடுத்தனர், F101 எனக்கு. மிக நேர்த்தியாய் ஆங்காங்கே பஃபே டைப்பில் சைவ சாப்பாடு, பாதாம் கீர் சகிதம். அசைவம் தனியாக அபிடைசர் என குறிக்கப்பட்டு் நுழை்வாயில் அருகிலேயே. ஆயிரக் கணக்கான மக்கள் சாப்பிட்ட போதும் குழப்பமே இல்லை.
அடுத்து ஒன்பது மணி நடனக் காட்சிக்கு, மொபைலை டெபாசிட் செய்து விட்டு நமக் கென குறிக்கப் பட்ட நுழை வாயிலில் உள்ளே நுழைந்து குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்த போது அரங்கம் நிரம்பியிருந்தது.
எழுபது நிமிட வரலாற்று நடன நாடகம். மனிதன் உருவான நாள் முதலாய் இன்று வரையான தாய்லாந்தின் வரலாறும், நாகரிகமும் மாறிய காட்சிகள். எருமைகள், யானைகள், ஆடுகள., கோழிகள், பறவைகள் எல்லாம் மேடை மேல் தோன்றின. காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன. கோட்டைகள், வயல்கள், காடுகள், ஆங்கிலேயரின் கொடிய தண்டனை இயநதிரங்கள் எனப் பலவும். காட்சி்்முடிந்தவுடன் வரிசையில் நின்று மொபைல் கலெக்ட் செய்து, பார்க்கிங் எண் மூன்றில் செனறு , வேனில் ஏறிய போது, பட்டாங் பீச் செல்லும் வேன் சக பயணிகளுடன் புறப்பட்டு ஓட்டல் வாசலில் இறக்கியது. மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. நாளைக் காலை மீண்டும் பயணம் என்ற் நினைப்போடு உறக்கம் அழைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக