பள்ளிக்குச் சென்றாயே பாடம் படித்தாயா
பக்கத்து பையனிடம் பேச்சை வளர்த்தாயா
எச்சில் கடியோடு கமர்கெட் தின்றாயா
பேச்சில் தொடங்கி சண்டை இட்டாயா
மணலில் விழுந்து முட்டி தேய்ந்ததா
படிப்பதை விட்டு பட்டம் விட்டாயா
துடிப்பது இதயம் வேகமாய் வந்தாயா
சினிமா சென்றங்கே விசில் அடித்தாயா
சிரிப்பும் பெரிதாகி சத்தம் செய்தாயா
பரீட்சை வருமன்று பாடம் படித்தாயா
பக்கம் பக்கமாய் கதைகள் விட்டாயா
பருவம் மாறியதால் பழையதை நினைத்தாயா
உருவம் சுருங்கியதை உணர்ந்து கொண்டாயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக