வியாழன், 12 ஜூன், 2025

கம்போடிய வியட்னாம் சுற்றுலா ( 11/2/25 to 22/2/25)

 கம்போடிய வியட்னாம் சுற்றுலா ( 11/2/25 to 22/2/25)

உயரப் பறப்பவை கீழே இறங்க வேண்டும் என்ற நியதியின் படி விமானம் நாம் பென் விமான நிலையம் அடைந்து தரையைத் தொட்ட போது, அடுக்கு மாடிகள் அதிகம் காணப்படாத நகரில் வந்திறங்கியது அறிய முடிந்தது.
முழுதான சுற்றுலாத் தகவல்களும், தங்குமிடங்கள், இந்திய உணவு விடுதிகள் அனைத்தும் பிரிண்ட் செய்யப்பட்டு கொடுக்கப் பட்டிருந்தது. செக் இன் செய்யும் நேரம் 2 மணியாதலால், மதிய உணவுக்குப் பிறகு, அவரவர் அறை ஒதுக்கப் பட்டது . நான் Travel Mart rep மஞ்சுநாத் என்ற இளைஞரோடு அறைப் பகிர்வு செய்ய முன்னரே ஒப்புக் கொண்டிருந்தேன்.
லக்‌ஸ் ரிவர் ஓட்டலிலிருந்து கிளம்பி, ராயல் பேலஸ், வாட் நாம் கோயில், சுதந்திர நினைவுச்சின்னம் என ஒவ்வொன்றாக பார்க்கத் தொடங்கி, பகோடா என்றழைக்கப் படுகிற கட்டிட வடிவங்களே அதிகமாய்க் காணப்பட்டன. சாலைகள் தூய்மையாக இருந்தன. தெருவோர உணவுக் கடைகள், டுக்டுக் என்கிற ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இந்திய உணவகங்கள் என நகரத்தின் அத்தனை பரிமாணங்களும் காணப்பட்டன. மறுநாள் உலகப் புகழ் பெற்ற , சூரிய வர்மனால் 37 ஆண்டுகளாக கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயிலைக் காணப் போகிறோம் என்ற ஆவல் மனதில் நிரம்பியது.
( தொடரும் சுற்றுலா)
All reactions:
Bethany Webster, Leena Judi and 7 others

கருத்துகள் இல்லை: