அயலகப் பயணம் , சிங்கப்பூர் & தாய்லாந்து , 17/11/24, 18/11/24
காலை உணவுக்குப் பிறகு புக்கெட் விமான நிலையம் செல்ல கார் பிக் அப் செய்து சுமார் ஒரு மணி நேரப் பயணம் செய்து ஏர்போர்ட்டில் இறங்கி, செக் இன், செக்யூரிட்டி முடித்து காத்திருந்தேன். ஓடிக் கொண்டே இருப்பது போன்று தோன்றியது. ஒரே பயணத்தில் பல இடங்களைப் பார்க்க வேண்டுமெனில் பயணங்கள் தவிர்க்க முடியாதது. அடுத்த முறை தாய்லாந்து வரவேண்டி இருந்தால் , ஒரே ஊரில் தங்கி அருகிலுள்ள இடங்களை மட்டும் பார்த்தல் நலமெனத் தோன்றியது.
விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம், சுவர்ணபூமி ஏர்போர்ட், பாங்காக்கில் இறங்கி வெளி வந்த போது இளைஞி ஒருத்தி டிரைவராக கார் பிக் அப் பட்டயா செல்ல வந்திருந்தாள். சுமார் 114 கிமீ தூரம். வழியில் மதிய உணவுக்காக நிறுத்தினாள். பலவகை உணவகங்ளும், Rest room களும் இருந்தன. அவளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. நான் KFC சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு, நாமே ஒரு டம்ளரில் குளிர் பானம் பிடித்து குடித்து, பதினைந்தே நிமிடத்தில் திரும்பனேன். கார் நெடுஞ்சாலையில் பயணித்தது. Eight lane highway. நான் பயணித்த அனைத்து ஊர்களிலும் சாலைகள் நன்றாக இருந்தன. கிராமப் புறம் ஏதும் தென்படவில்லை. அடுத்த முறை வந்தால் தவறாமல் கிராமப் புறம் செல்ல வேண்டும்.
ஓட்டல் Golden Beach ல் இறக்கி விட்டு , புன்னகைத்து அவள் கிளம்பினாள். வரவேற்பில் Lady Boy ஒருத்தி/ ஒருவன் தயாராக ஓட்டல் அறை சாவி, காலைஉணவு கூப்பன் முதலானவற்றைக கொடுக்க அறை எண் 3016 க்குள் நுழைந்து , ஓய்வெடுக்கத் தொடங்கினேன். ஓட்டலுக்கு அடுத்து இரண்டு இந்திய உணவகங்கள். ஒன்றில் இட்லி, வடை, ஃபில்டர் காப்பி கிடைத்தது. மாலையில் நமது டூர் கைடு் பன்னாலாலின் பாரட்னர் வந்து நகர் வலம் அழைத்துச் சென்றார். ஷேர் ஆட்டோ பயணம் செய்வதைச் சொல்லிக் கொடுத்தார்.
இரவு உணவை முடித்து கடற்கரை ஓரமான சாலையில் ஆட்டோவில் பயணித்து, Pataya வின் Walking street ல் இறங்கி, நீண்ட நடைப் பயணம் ஒன்று. அதே ஆரவாரம், நடன மேடைகள், கேம்கள், கேளிக்கை விடுதிகள், யுவன், யுவதி அழைப்பு எல்லாமும். பார் ஒன்றில் துழைந்து உள்ளே சென்றபோது, நடக்கவும் இடமில்லை, வட்ட மேசைகளில் ஆண்கள், பெண்கள் சோமபானங்கள் அருந்திய படி காதைக் கிழிக்கும் இசையை இரசித்தனர். சீக்கிய உடையில் நடனமாடி நுழை வாயிலில் ஆண்கள். அதைக் கடந்து, துப்பாக்கி சுடுதலில் 15 குண்டுகளில் சுமார் பத்து குண்டுகளை வட்டங்களுக்குள் சுட்டு, நடந்து தெரு முனைக்கு வந்து, ஆட்டோவில் ஏறி ஓட்டல் வாசலில் இறங்கி, பத்து Bhat செலுத்தி விட்டு மறுநாள் காலை பயணத்திற்கு கடல் பயணத்திற்கான உடைகளை பேக் செய்து் உறங்கியானது.
காலை ஒன்பது மணிக்கு் வேன் ஒன்றில் பிக் அப் செய்து, pataya பீச்சின் படகுத் துறை அருகே இறக்கி விட்டனர். Ismail என்ற ஹைதராபாத் இளைஞர் அங்கே நண்பரானார். அவரும் தனியாக வந்திருந்தார். கைகளில் மார்க்கர் மூலம் குறியீடு ஒன்றை ஆர.கனைசர் எழுதினார், அதில் நான் தனி ஒருவன் என்பதின் அடையாளமாய் ஒன்று என்பதும் கூட. Q31/1 . பத்தரை மணிக்கு ஸ்பீட் போட்டில் ஏற்றி நடுக்கடல் தளமொன்றில் இறக்கி ஒரு பெரிய வியாபாரப் பேச்சு.
Pars Sailing, Undersea Walk, Scuba diving, Jet ski என வகை வகையான வீர விளையாட்டுகள் விளக்கப் பட்டன.ஒவ்வொரு தளமாக மாற்றி கடைசியாக கோரல் ஐலண்ட் எனப்படும் கிளியர் வாட்டர் வெண்மணல் கடற்கரையில் இறக்கி விட்டார்கள். ஒவ்வொருவராக கடல்நீர் ஸ்கூட்டரில் ஐந்து நிமிட வலம், ஓட்டுனர் உதவியோடு முடித்துத் திரும்பி, கடலுக்குள் இறங்கி் நீந்த முயற்சித்து உடைகள் முழுதும் நனைந்த பின்னர், முதல் குழுவோடு படகுப் பயணம் செய்து, கரைக்குத் திரும்பி வேனில் பயணித்து, இந்திய உணவை மதிய உணவாக ஏற்பாடு் செய்ததைச் சாப்பிட்டு மீண்டும் வேனில் அமர்ந்து ஓட்டலில் இறங்கி, இஸ்மாயிலுக்கு் டாடா காண்பித்து, பிரேம் ஒன்றில் நமது போட்டோ பிரிண்ட் செய்து காசுக்குக் கொடுத்திருந்தனர், அறைக்குத் திரும்பி ஓய்வு.
மாலையில் இரவு உணவு முடித்து, Alcazar show என்ற தாய்லாந்து பாரம்பரிய நடனக் காட்சி ஆங்கில இசையுடன், மிகக் குறைந்த ஆடைகளுடன், ஆனால் ஆபாசமின்றி நன்றாக இருந்தது. அரங்கம் நிரம்பிய ஒரு் மணி்நேரக் காட்சி. விக்கி காரில் வாயாடிக் கொண்டே வந்து ஓட்டலில் இறக்கினார். நன்றி சொல்லி, அறைக்கு வந்து மறு்நாள் இந்தியா திரும்பும் பயணத்திற்கு பேக் செய்து, உறங்கியானது.
காலையுணவு முடித்து, எட்டே காலுக்கு வந்த காரில், மீண்டும் பாங்காக் விமான நிலையம் அடைந்து, சோதனைகள் கடந்து, காத்திருப்புக்குப் பின் , ஒன்றரை மணியளவில் , உயரப் பறந்த விமானம், முழுதாகப் பயணியர் நிரம்பி இருந்தனர். சுமார் மூன்றரை மணியளவில் இந்திய நேரப் படி, தரை இறங்கி, லக்கேஜ் கலெக்ட் செய்து, கஸ்டம்ஸ் செக்கிங் முடித்து , ஓலா டாக்ஸியில், பெங்களூர் நகர போக்குவரத்தைக் கடந்து வீடு் சேர மாலை ஆறு மணி நெருங்கியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகான் அயல்நாட்டுப. பயணம் நிறைவு பெற்றது. அடுத்த பயணம் விரைவில் தொடரும்.
(முற்றும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக