ஆண்டொன்று போகும் வயதொன்று கூடும்
புத்தாண்டு பிறக்கும் புதுச்சிந்தனை தோன்றும்
வாழ்த்துகள் குவியும் வணக்கங்கள் சொல்லும்
வாசலில் கோலங்கள் வண்ணம் சேர்க்கும்
வேற்றுமை மறையும் வாழ்த்தி மகிழும்
மனிதம் மிகுந்த மானிடர் பலரும்
எங்கும் தோரணம் எண்ணற்ற மகிழ்வும்
எத்தனை அழகு இதுவே நிரந்தரமாகுக
ஒருமித்த எண்ணமும் உயர்வான கருத்தும்
காலம் கடந்தும் தொடருமாயின் இனியதாகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக