கம்போடிய வியட்நாம் சுற்றுலா (11/2 to 22/2/25)
சில மாதங்களாகத் திட்டமிட்டு, பயண ஏற்பாடுகள், விமான டிக்கெட்டில் ஆரம்பித்து , சில மீட்டிங்குகள் கேள்வி பதில்கள் எல்லாம் முடிந்து, முழுதாய்ப பணமும் செலுத்திக் காத்திருந்த அந்நாளும் வந்தது.
சோதனையாக 10/2/25 முதல் ஏர் ஷோ நடை பெறுவதால் , விமானங்கள் நேரத்திற்குச் செல்லுமா, பயணத்தில் பங்கெடுக்கும் அறுபதுக்கு மேல் வயதுடைய நணபர்கள் எவ்வாறு வந்து சேர்வர் என்ற கேள்விகளுக்கு பல விடைகள் கிடைத்தாலும் அவரவர் வீட்டின் லொகேஷன் பொறுத்து முடிவெடுக்கவும் சொல்லியாயிற்று. குறைந்த்து எட்டரைக்குள் அனைவரும் ஏர்போர்ட் அடைய வேண்டும் என்றும் வாட்சப்பில் மெசேஜ் பரவியது.
முன்னதாக அனுப்பப் பட்ட டிக்கெட், விசா முதலானவற்றை பிரிண்ட் அவுட் எடுக க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் ,TM rep print outs கொண்டு வருவார் என முற்றுப் பெற்றது.
ஓலா டாக்சி புக் செய்து டாக்சி வந்தபோது, எவ்வளவு fare வந்தது எனக் கேட்டு ஆயிரம் கொடுத்து விடுங்கள் எனச் சொல்லி அவரது ஆப்பில் கேன்சல் செய்து விட்டார். நானும் காரில் அமர்ந்து சுமார் 2 கிமீ பயணித்த போது, ஓலா டாக்சி அழைப்பு மீண்டும். நான் லொக்கேஷன் வந்து விட்டேன் நீங்கள் எங்கே என்று, App open_ல் இருந்ததால் வேறொரு டாக்ஸி புக் ஆகி அவன் வந்திருந்தான். நான் ஏற்கனவே கிளம்பி விட்டேன் என்று சொன்னதற்கு அவன் கத்த ஆரம்பித்தான் மொபைலில். ஒரு டிரைவருக்கு உதவி செயயப்போக வம்பில் மாட்டியது இப்படித்தான்.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக