திங்கள், 31 அக்டோபர், 2022

நட்பு மலரும்

 பலவித ஆறுகள் ஒன்றாய்க் கலக்கும் நட்புக் கடல்

பற்பல கொள்கைகள் கொண்டே வளரும் பேதங்கள் இல்லை
காட்டாறு கிளையாறு சின்னாறு பெரியாறு எல்லாமும் உண்டு
காட்டமாய் கோபமாய் இனிதாய் இளக்காரமாய் பேசுவது இயல்பு
எதையும் மறந்தே கூடியே வாழ்தல் இவரது பண்பு
சதையும் நகமும் போலவும் சிலரது நட்பு மலரும்
மனதில் மகிழ்வு கூச்சல் ஆரவாரம் அனைத்தும் உண்டு
சினமது சிலநொடியே சிரித்து மகிழ்ந்திட காரணம் தேவையில்லை
துன்பம் ஒன்று வந்திட துணையென கூடவே தொடரும்
இன்பம் நிறைந்த நாட்கள் இதயம் முழுதும் நிறையும்
உறவினில் உயர்ந்தது என்பர் உயிரான நட்பென்ற கூற்று
பிறவிப் பயனும் உயர்வே இணைந்தே வருகின்ற தொடர்பாய் !

கருத்துகள் இல்லை: