திங்கள், 31 அக்டோபர், 2022

முதுமை

 ஓடிய கால்கள் நிற்பதில்லை என்றும்

ஓய்வது மனதா உடலா வினா
தேயும் நிலா மறுபடி முழுதாய்
தேகம் என்பதோ தளரும் சுருங்கும்
வேகம் குறைந்து தளரும் நடையும்
மேகம் மறைத்த நிலவின் ஒளிபோல்
பார்வை குறைந்து கண்கள் மங்கும்
போர்வை தேடும் தேகம் நடுங்கும்
காட்சிகள் பலவும் கண்முன் ஓடும்
காலங்கள் சுழன்று கற்பனை உலகில்
மாறும் பருவம் மழலை திரும்பும்
மானிடம் மறையும் மறுபடி தோன்றும்
முதுமை என்பது முடிவுரை ஆகும்
பதுமை ஒன்று வாசலில் நிற்கும்

கருத்துகள் இல்லை: