திங்கள், 31 அக்டோபர், 2022

வரச் சொல்லு

 சுட்ட வெயிலுக்கு சும்மாடு கட்டிப் போறவளே

எட்ட நடை போட்டு எங்கேநீ போவறியோ
சொட்டச் சொட்ட வேர்வையிலே நனஞ்சு போறவளே
வட்ட நிலா காயுதுன்னு கனவு கண்டாயோ
தொட்டு உன்னை தாலிகட்டி தொலைதூரம் போனானோ
துட்டு சேத்து மாடி ஒண்ணு கட்டுவானோ
கட்டு சாதம் கட்டி கழனி வேலை
விட்டுப் போனானே விடுப்புலே எப்ப வருவானோ
வயக்காடு விட்டுபுட்டு பாலைவன மண்ணுலே பரிதவிக்கான்
காயுற வெய்யிலிலே அவனுமே காஞ்சு போறான்
என்ன வாழ்க்கையோ புரியாத புதிரா போச்சு
தின்ன சோறும் கரிசனமா நீயும் இருக்கையிலே
பணம் சேக்க பலமாதம் உன்ன பிரிஞ்சானே
மணம் முடிச்சு மாமனை விட்டு வாடறியே
வரச் சொல்லு நெல்லும் வரகும் வாழையும்
வளமா பயிர்வச்சு வாழலா முன்னு சொல்லு !

கருத்துகள் இல்லை: