திங்கள், 31 அக்டோபர், 2022

ஓடிப் போகலாம் வாரியா

 ஓடிப் போகலாம் வாரியா

ஓடம் ஏறிப் போகலாம்
ஓயாது ஊர் சுற்ற
ஓசை எழுப்பி கத்தலாம்
ஓடும் நதியில் நீந்தலாம்
பாட்டுப் பாடி ஆடலாம்
கூட்டுச் சோறு தின்னலாம்
காட்டுப் பாதையில் போகலாம்
கால்கள் ஓயும்வரை நடக்கலாம்
கடற்கரைக் காற்று வாங்கலாம்
கடலை சுண்டல் சாப்பிடலாம்
கடைவீதி எங்கும் சுற்றலாம்
கற்களை வீசி களிக்கலாம்
சொற்கள் விளையாட்டு ஆடலாம்
சொத்து சேர்க்கும் விளையாட்டும்
சொக்கட்டான் ஆட்டம் ஆடுவோம்
சொக்கும் அழகை இரசிக்கலாம்
நாக்கு ருசியாய் உண்ணலாம்
நாடெல்லாம் சுற்றி வரலாம்
நாளதும் பொழுதும் நகரட்டும்
நாமும் அதனோடு நகரலாம்

கருத்துகள் இல்லை: