திங்கள், 31 அக்டோபர், 2022

உழைப்பாளி

 உழைப்பாளி என்பவன் யார் வினவினேன்

காடு மேடெல்லாம் நடந்து விறகொடிப்பவனா
கழனியில் ஏரோட்டி விளைவிக்கும் விவசாயியா
பாலைவன மணலில் பரிதவிக்கும் பாமரனா
தெருவெங்கும் நடந்து குப்பை அகற்றுபவனா
இயந்திரம் இயக்கி களைத்துப் போகுமவனா
ஊரூராய்ச் சுற்றும் வணிகப் பெருமானா
தெருவோரக் கடைகளில் கூவும் மூதாட்டியா
தலையில் சுமந்து நடந்து தேய்பவனா
அலுவலக அறையில் சொகுசான அதிகாரியா
அடுப்பறை சூட்டில் அயராத அவளா
குளுகுளு அறையில் விட்டம் நோக்குபவனா
கடலின் ஆழத்தே முத்துக் குளிப்பவனா
மீன்பிடி படகில் காததூரம் செல்பவனா
உலகம் சுழல உயிர்கள் சுழல
உய்த்திருக்க உழைக்கும் எவரும் தொழிலாளியே
இன்றென்ன என்றென்றும் அவர் தினமே
அவர் அசைந்தாலே உலகும் அசையும்

கருத்துகள் இல்லை: