திங்கள், 31 அக்டோபர், 2022

குட்டிப் பயலே

 குட்டிப் பயலே எட்ட நின்றே பார்க்கிறேன்

சுட்டித் தனம் அதிகம் உன்னிடம் காண்கிறேன்
எட்டி நின்றாலும் எப்படி அழுகிறாய் கண்ணீரில்லை
சொட்டு நீரும் வராத அழுகை எப்படி
கண்ணை மூடியே பூச்சாண்டி மட்டும் சொல்வாய்
கண்ணன் வெண்ணெய் திருடிய ஒற்றைப் பார்வை
அப்பனைப் போலவே அதிகக் கோபம் உன்னிடம்
அம்மாவிடமே அடைக்கலம் தாத்தா வேண்டாம் என்றே
எத்தனை நாட்கள் இப்படி நானும் பார்ப்பேன்
கத்துவாய் ஒருநாள் காரில் பவனி வேண்டுமென
இப்போது தானே உன்னை செவிலியர் கொணர்ந்தார்
இதற்குள்ளே ஓராண்டு ஆயிற்றா நடந்துவா என்னிடம்
எட்ட நின்றே வேடிக்கை பார்த்தது போதும்
கிட்ட வந்து என்மீது அமர்ந்து பார்

கருத்துகள் இல்லை: