திங்கள், 31 அக்டோபர், 2022

காத்து வாக்குல வந்த நட்பு

 காத்து வாக்குல வந்த நட்பு

நேத்து போலவே இருக்கு காட்சி
பீச்சு மணல் கதைகள் பலவும்
பச்ச புல்வெளி மாடிப் படிகள்
ஓடிப் பிடிச்ச திருடன் போலீஸ்
பாடிப் பழகிய இரவின் மடிகள்
தேடிப் போகலே தானாய் வந்தது
டீக்கடை வாசல் திண்ணை வாசம்
போக்கிய நேரங்கள் எண்ணில் அடங்கா
கோபம் சண்டை மறுபடி அமைதி
லாபம் நோக்கா நாட்கள் அவையே
குழப்பம் இல்லை குற்றம் இல்லை
வழக்கில் இருந்த வாஞ்சை மனதில்
உறவுகள் வளரும் உண்மை அன்பும்
உனது வீடு எனது போலவே
சுகமாய் தூங்கிய இரவுகள் பலவும்
சுற்றிய இடங்கள் எண்ணில் அடங்கா
காலச் சக்கரம் எத்தனை வேகம்
கால்கள் ஓய்ந்த தருணம் இப்போது
திரையில் காட்சிகள் காவியம் போலவே
நரைத்த முடிகள் அனுபவ சான்றாய்
அசை போடும் மனதில் அனைத்தும்
அலை அலையாய் வந்து போகும்

கருத்துகள் இல்லை: