திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 9

சில நாட்கள் தொடர்ந்த ஓய்வில், ஒரு நாள் ஓஷோ தீர்த் பார்க் என்ற Osho Garden மதிய உணவுக்குப் பிறகு மூன்று மணி திறக்கும் நேரத்தில் உள் நுழைந்த போது காடு போன்ற தோற்றமளித்த பெரும் தோட்டத்தைக் காண முடிந்தது. ரஜனீஷ் சிலை வரவேற்றது. மெல்ல நடக்க ஆரம்பித்த போது ஓடையொன்று தோட்டம் முழுவதுமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அழுக்காகவும் ஆயில் நாற்றமுடனும் இருந்ததால் சாக்கடை நீர் போன்றே தோற்றமளித்தது.

மெதுவாக நடக்க ஆரம்பித்த போது பராமரிக்கப் படாத ஒரு தோட்டமாகவே காணப்பட்டது. காட்டுச் செடிகள், மூங்கில் என பல்வேறு மரங்கள். தோட்டம் இரண்டாகப் பிரிக்கப் பட்டு சாலை நடுவே இருந்தது. புத்தர் அமைதியாக ஓரத்தில் அமர்ந்து இருந்தார். சீர் செய்யப்பட்டு இதை இன்னும் அழகாக மாற்றலாமோ எனத் தோன்றியது. இதை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி விட்டதாக அறிந்தேன். உண்மையான ஓஷோ ஆசிரமம் பற்றி முன் கட்டுரையில் கூறி இருந்தேன்.
ஞாயிறன்று Barbeque nation ல் வயிறு முட்ட சாப்பிட்டபோது மறுநாள் காலை Konkan Beaches போகும் முடிவை மகனிடம் தெரிவித்து, முதலில் Anjarle beach செல்வதாக முடிவெடுத்து Home stay ஒன்றும் Goibibo மூலமாக புக் செய்தாயிற்று.
சுமார் 190 கிமீ பயணம். காலை ஏழு மணிக்கு முன்பாக புறப்பட்டு முல்ஷி ஏரிக்கு எதிரில் உள்ள சிவ் ஷாகரில் நுழைந்த போது, பேருந்துகள் பலவும் நிறுத்தப் பட்டு கூட்டம் அதிகமாக. சிற்றுண்டி முடித்துக் கிளம்பி, தாமினி காட் வழியாக. பயணித்த போது அருவிகள் கொட்டிய இடங்களில் பாறைகளும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் மழை இல்லாததால் முழுதாக மாறிப் போயிருந்தது.
குடையைத் தொலைத்த கடையும் மூடி, அருவிகள் காணாமல் போயிருந்தன. நீண்ட பயணம் மீண்டும் தொடர, சாலைகள் நன்றாகவே இருந்தன. ஆறு மணி நேரப் பயணம் செய்து அஞ்சர்லே அடைவதற்கு முன்னால், ஓரிடத்தில் Ferry என்னும் படகில் காரை ஏற்றி ஆற்றைக் கடக்க ஒரு மணி நேரம் காக்க வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக புக் செய்த இடத்தை அடைந்து, விசாரித்த போது, அவன் புக்கிங் ஏற்றுக் கொள்ளவில்லையென அதிர்ச்சி கொடுத்தான். மதியம் இரண்டாகி இருந்தது. பசி வேறு. எங்கும் சாப்பிடும் உணவகம் இல்லை. தங்குமிடம் தேடிப் பயணித்த போது மலைகள் கடந்து கடல் பெரிதாக விரிந்தது. பயணத்தைத் தொடர்ந்து அடுத்த இடமான ஹரிஹரேஷ்வர் பீச் போக முடிவெடுத்து, விசாரித்த போது, சாவித்திரி ஆற்றைக் கடக்க ஆற்றை Ferryல் போக வேண்டுமென அறிந்தேன். முதல் முறை கடக்க அரசின் பெர்ரி கட்டணம் வசூலிக்கவில்லை. இம்முறை 180₹ செலுத்தி இரசீது பெற்று, புறப்பட சிறிது நேரம் இருந்த தால், வயிற்றுக்கு சிறிது ஈயப்பட வேண்டுமென, டீக்கடையில் கிடைத்த பாவ் பன், முட்டை ஆம்லெட், டீ எல்லாமும் just 50₹ நல்ல மனிதரும் கூட.. எனக்காகக் காத்திருந்த படகில் காரில் உட்கார்ந்து கரை சேர்ந்த போது மணி ஐந்தாகி இருந்தது. முதலில் தங்குமிடம் தேடி மெதுவாகக் கார் ஊர்ந்தது.
( வரும்)

கருத்துகள் இல்லை: