திங்கள், 31 அக்டோபர், 2022

புதிய ஆண்டு

 காலத்தின் ஏடுகள் நாளும் மாறும்

ஞாலத்தே பருவ மாற்றம் சிறக்கும்
நாட்கள் மாதங்களாய் ஆண்டுகளாய் உருளும்
ஆட்டம் ஆனந்தம் அவனியில் தொடரும்
அன்பென்ற ஒன்றே அணைக்கும் ஆயுதம்
அன்னையின் உள்ளம் அனைவர்க்கும் வேண்டும்
பந்தம் பாசம் பரவுதல் நலமாம்
சொந்தம் கொண்டாட நாட்கள் பலவும்
வந்தது புதியது ஆண்டு இன்று
வந்தனம் சொல்லியே உள்ளத்தில் ஏற்போம்
மகிழ்வு பொங்கட்டும் மக்கள் மனதில்
முகிழும் நல்லதோர் உறவு நமக்குள்

கருத்துகள் இல்லை: