திங்கள், 31 அக்டோபர், 2022

முட்டாள் மனிதரா

 பாட்டுக்குப் பொருள் யாரே அறிவர்

விட்டில் பூச்சிகள் விளக்கில் எரிவதுவோ
சட்டியில் இருப்பது அகப்பையில் வருமாம்
சட்டம் போட்டவர் சதிசெயல் ஆகுமோ
முட்டாள் மனிதரா முடிசூடிய மன்னனா
கெட்டவர் மேலும் தாழ்ந்தே போவரோ
கொட்டம் அடிக்குது கும்பல் ஒன்று
கோட்டான்கள் வேதம் ஓதும் அவலம்
பட்டியல் இட்டது அனைத்தும் பொய்யே
வட்டியும் முதலாய் வருமோ பின்னாளில்
ஆட்டம் அதிகம் ஆரவாரம் வான்வரை
வட்டம் ஒன்றில் ஊர்வலம் போகுது
கொட்டக் கொட்ட குனிவது தொடருமோ
சொட்டும் தேனுக்கா சொக்கிப் போவது
கட்டுத் தறியில் காளைகள் திமிருது
வெட்டிப் பேச்சுகள் வெந்து போகும்
பட்டுப் போகும் வேரில்லா மரமும்

கருத்துகள் இல்லை: