திங்கள், 31 அக்டோபர், 2022

மெல்லத் தவழ்ந்த கால்கள்

 மெல்லத் தவழ்ந்த கால்கள்

மெதுவாகப் பேசும் மழலை
சொல்லத் தெரியா சொற்கள்
சொக்க வைக்கும் அழகு
கள்ளம் இல்லா சிரிப்பு
உள்ளம் கொள்ளை போகும்
உருவம் சிறிதே உனக்கு
உருட்டிப் பார்க்கும் கண்கள்
கட்டிப் பிடித்தே அணைத்து
கன்னத்தில் உனக்கொரு முத்தம்
எட்டப் போகாதே அருகிரு
புட்டிப் பாலும் வேண்டாம்
சுட்டிப் பயலே சிரித்திரு
சுற்றிப் போடணும் திருஷ்டி
கன்னல் சுவையாம் வார்த்தை
மின்னல் போலொரு பார்வை
செல்லப் பாப்பா நீயே
மெல்ல அடியடுத்து அருகேவா !

கருத்துகள் இல்லை: