திங்கள், 31 அக்டோபர், 2022

தூரத்தே தெரியுது

 தூரத்தே தெரியுது தென்னந் தோப்பு

பாரத்த சுமந்த தோள்கள் சொல்ல
மலைப் பாதையில் பல மைல்கள்
சாலைகள் இல்லாத காலத்தே கால்நடையா
அப்பா ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை
தப்பாம போனது கண்ணுலே இன்றும்
ஓட்டேரி தாண்டினா ஊருண்ணு பொய்யும்
கட்டிய மாட்டு வண்டி மட்டுமே
ஊரு விட்டு ஊரு செல்லும்
கலப்பை பிடிச்சு உழ தடுமாற
களத்து மேட்டுல நிண்ணு வேடிக்கை
சாயங்கால வேளையில் கலக்கல் குடிக்க
சாரை சாரையா போறதும் வேடிக்கை
கடலை வறுத்து ஈசல் கலந்து
உடனும் சேர்த்தே உள்ளே போகும்
வகை வகையாய் காய்களோடு நெல்லும்
வயல் ஓரம் பனை மரங்கள்
களியும் கூழும் கடலை மோரும்
கலந்தே தினம் தினமும் சுவையா
நெல் குத்தி அரிசியாகி சோறும்
நெடுந் தேக்கு இலையில் சாப்பாடும்
மாமன் வீடு பங்காளி வீடு
மாறி மாறி விளையாடிக் களைச்சி
வானம் பாத்த பாயிலே படுத்து
வாதம் செஞ்ச நாட்கள் அருமை
போனதே மறுபடி வருமா திரும்ப
ஏனப்பா உன்னத் தான் கேக்கறேன்
வாலிபம் மறஞ்சு வயசானா இப்படித்தான்
வாடிக்கை பழச பேசியே தினமும்

கருத்துகள் இல்லை: