திங்கள், 31 அக்டோபர், 2022

இயற்கை அழகே

 எதுவும் அழகே எங்கும் அழகே

எண்ணம் அழகே வண்ணம் அழகே
இயற்கை அழகே இறையும் அழகே
பயணம் அழகே பசுமை அழகே
கடலும் அழகே கதிரவன் அழகே
படகு பாய்மரக் கப்பல் அழகே
மலைகள் அருவிகள் காடுகள் அழகே
சிலைகள் சிற்பங்கள் ஓவியம் அழகே
ஆறுகள் குளங்கள் ஏரிகள் அழகே
ஆம்பல் அல்லி மல்லியும் அழகே
வளைவுகள் சரிவுகள் வனப்பான அழகே
வயல்வெளி வண்ணப் பூக்கள் அழகே
எத்தனை படைத்தாய் இறைவா நீயும்
பித்தனாய் மாறியே சுற்றினேன் உலகையே !

கருத்துகள் இல்லை: