திங்கள், 31 அக்டோபர், 2022

கவிதை ஆரணங்கே

 உள்ளிருந்து பொங்கும் உதிர்ந்து கொடடும்

துள்ளிக் குதிக்கும் துவண்டும் போகும்
கள்ளமில்லா சிரிப்பும் களிநடனமும் புரியும்
கொள்ளை கொள்ளும் மனதை உருக்கும்.
வெள்ளந்தியாய் சிரிக்கும் வெகுளியாய் நோக்கும்
பள்ளம் மேடென்று பாராமல் பயணிக்கும்
வெள்ளம் பெருக்கெடுத்து வீதிவீதியாய் ஓடும்
அள்ளக் குறையாத அமுதசுரபி எனலாம்
எள்ளி நகையாடி ஏளனம் செய்யும்
புள்ளிகள் இட்டு கோலங்கள். போடும்
வெள்ளை நிறம்மாறி வண்ணம் பூசும்
கொள்ளை கொள்ளும் கொஞ்சி விளையாடும்
சொல்லி மாளாது சொக்கும் அழகை
சொர்ணமாய் ஜொலிக்கும் கவிதை ஆரணங்கே !

கருத்துகள் இல்லை: