திங்கள், 31 அக்டோபர், 2022

விடைகள் தேடியே

 ஞாலத்தின் விழுதுகளை நட்டது யாரோ

காலத்தின் வட்டங்களை கடத்துவது யாரோ
சோதனைகள் பலவற்றை கொட்டுவதும் யாரோ
வேதனைகள் உள்ளத்தில் விதைப்பதும் யாரோ
பேதங்கள் என்றென்றும் தொடர்வது யாராலோ
வாதங்கள் பெரிதாகி வாட்டமுறல் யாராலோ
சொந்தங்கள் நிரந்தரம் இல்லாதது யாராலோ
பந்தங்கள் துறந்து துறவறம் யாராலோ
இனியவை மறந்து தீயவைகொள்ளல் எவராலோ
இன்னலைத் தழுவியே வாழுதல் எவராலோ
சொல்வதும் செய்வதும் மாறுதல் எதனாலோ
சொல்லாத சொல்லுக்கு விளைவுகள் உண்டாமோ
கேள்விகள் தொடர்ந்திடும் வாழும் நாளெலாம்
விடைகள் தேடியே விரைந்திடும் நாட்களும்

கருத்துகள் இல்லை: