திங்கள், 31 அக்டோபர், 2022

வாடா நண்பா

 கருக்கலிலே எழுந்து வாடாநண்பா போகலாம்

கடற்கரைலே காலாற நடந்து வருவோம்
கதைபேசி எத்தனை நாளாச்சு நண்பா
கடமைலே மூழ்கியே நாட்கள் ஓடிப்போச்சு
உடமைகள் இருந்தும் மனசுலே வேதனை
உதறி விட்டுவா ஊரெல்லை கோயிலுக்கு
ஊர்க்கதை வேணாம் நம்கதை பேசுவோம்
கால்கடுக்க நடந்த கதைகள் பலவும்
காதலித்த நாட்கள் பற்றிப் பலவும்
ஊர்சுற்றி உலகம் சுற்றிய கதைகள்
ஊஞ்சலிலே ஆடிய சிறுவயது மகிழ்ச்சி
ஏரிக்கரை குளக்கரை ஆத்துமணல் கடற்கரை
ஏறிய மரக்கிளை இறங்கிய கிணறு
எத்தனை உண்டுபேச எழுந்துவா விரைந்து
எஞ்சிய நாட்களிலே பேசிக் களிப்போம்
கோலூன்றி நடக்குமுன்னே காலூன்றி வாநண்பா
கோடிகதைகள் வச்சிருக்கேன் சொல்ல விரைவில்வா !

கருத்துகள் இல்லை: