திங்கள், 31 அக்டோபர், 2022

அப்பாக்கள் எரிமலைக் குன்றுகள்

 எனது அப்பா போலீஸ்களுக்கே உள்ள முரட்டு சுபாவம் பிடித் தவர். அம்மாவைக் கொடுமை படுத்தினார், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என பல காரணங்களுக்காக அவர் மீது எப்போதும் வெறுப்புண்டு எனக்கு. அவர் அழுது நான் பார்த்ததே இல்லை.

அம்மா இறந்த அந்த ஏப்ரல்1,1974 அன்று, பியூசி தமிழ்த்தாள் பப்ளிக் எக்ஸாம்(முன்னர் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்). அவர் எதுவும் என்னிடம் பேசவில்லை, காலையிலிருந்து நான் அழுது கொண்டே இருந்தேன். தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் மதிய எக்ஸாம். உறவினர் பலரும் என்னை தேர்வு எழுதி வா, இறுதிச் சடங்கு நீ வந்த பிறகே செய்வோம் என்றனர், தூரத்து உறவான மாமாவும் கூட வருவதாக முடிவானது.
நான் அழுதபடியே கிளம்பி தெருமுனையைக் கடந்த போது பார்த்தேன், அப்பா அழுது கொண்டிருந்தார். கல்லும் கரையும் என்பதை அன்று உணர்ந்தேன்.
தேர்வாகி பொறியியல் படித்து உங்களோடு நான் பேசுவது இன்றைய கதை.
அப்பாக்கள் எரிமலைக் குன்றுகள்.

கருத்துகள் இல்லை: