வெள்ளி, 8 மே, 2026

உழைப்பவர் பெருமை

இன்றல்ல என்றுமே உழைப்பவர் அவர் இறைக்கு ஈடான உறுதி கொண்டவர் இயங்கும் உலகே இவர்தம் தயவால் இயந்திரம் போன்றே இயங்கும் மனிதர் மண்ணைப் பொன்னாக்கும் வித்தை கற்றவர் எண்ணெய் சுரக்க எரிதழல் வெயிலில் தன்னைச் சுட்டு தரணிக்குத் தருபவர் தன்னலம் பாராத தகைசால் பெருமகனார் உண்ண உணவும் உழுபவர் கைகளில் சொல்லி மாளாது சோர்விலா மானிடர் வெல்வது சிலரே வறியவர் பலரே ஊருணி நீரும் ஊரெல்லாம் சாலையும் பாருக்கே ஒளியும் மாடமாளிகை கோபுரமும் உழைக்கும் உடலின் வியர்வைத் துளிகளில் உழைப்பவர் பெருமை ஒருநாள் அல்ல தினம்தோறும் போற்றுதற் குரியது அன்றோ ? மனங்கள் மகிழ வாழ்த்துகள் சொல்வோம்

கருத்துகள் இல்லை: