வெள்ளி, 8 மே, 2026

கோப்பை முழுவதும் கண்ணீர்

புரியாமலே எனக்குள் தேடினேன் எதனால் புரிந்ததும் புரியாமலே விடையும் கிடைத்தது அழாமலே கண்ணீர் உண்டா ஆராய்ந்தேன் அதற்கும் ஒருவிடை ஆனந்த மிகுதியால் சரிசரி கோப்பை நிறையுமா இயலாதே சரிவர யோசித்தே நாளும் கடந்தது இன்றாவது விடையுண்டா தெரியாது குழப்பமே நன்றாக தலைப்பு வேண்டாமா சோகமேன் ஒன்றாக பலவாக பெருகினால் நிறையும் ஒன்றும் ஒன்றும் இரண்டு விடையிங்கே யுத்தம் என்று வந்தாலே கண்ணீர் புத்தன் சொன்னதை எவன் கேட்டான் அழிவின் காரணம் அளவில்லா ஆசையே அடுத்தவன் நாட்டை அடையப் பார்க்கும் மலிந்தவன் தலையை நசுக்கி நகைக்குது எலியைப் பூனைகள் வேட்டை ஆடுது பொய்களின் போர்வையில் குளிரும் காயுது பொல்லாத புத்தி எத்தனை நாட்களோ மனிதனை மனிதனே மாய்க்கும் பாதகம் புனிதம் எங்கோ தொலைந்து போனது கண்ணீரின் கடலில் மூழ்கிடும் மனிதர் கண்ணியம் அற்ற தலைவர் மற்றவர் இருவேறு துருவங்கள் இங்கும் அங்கும் கோப்பை மட்டுமா குளங்களாய் உதிரம் கோரிக்கை யாரிடம் வைப்பது நிறுத்திட இயற்கை கொடுப்பது அனைவர்க்கும் சமமாய் இரக்கம் அற்றவர் அனைத்தும் கேட்பர் இறைவன் உண்டெனில் இவரை அழிக்கட்டும் ஆனந்தக் கண்ணீரில் கோப்பை நிறைந்தால் ஆள்பவர் என்ன அண்டமே மகிழும் அனைத்தும் அனைவர்க்கும் என்பதே சமத்துவம் அதிலென்ன குறையோ ஆள்பவர் கண்டார் தனக்கென வாழாத் தலைவர் மறைந்தனர் தன்னலம் மிக்க மாக்களின் ஆட்சி தறிகெட்ட பாதையில் தரணியே ஓடுது வெறிகொண்ட மிருகமாய் வேட்டை ஆடினர் முடிவே இல்லாத கதையாய் சரித்திரம் முதலில் இருந்து மீண்டும் ஆரம்பம்

கருத்துகள் இல்லை: