வெள்ளி, 8 மே, 2026

முடிகின்ற நாளின் உறக்கம்

வரப்பு மேட்டிலே ஓடி வந்து வழுக்கி சேற்றில் காலை விட்டு கிணற்று நீரில் கழுவி விட்டு கிழங்குத் தோட்ட நீரைப் பாய்ச்ச மடையை மாற்றி சேற்றை அணைத்து மக்கிய இலைகளை எருவாய் மாற்றி பயிரிட்ட காலம் இன்றும் கண்ணில் கயிற்றை இடுப்பில் கட்டி தள்ளிவிட கிணற்றில் தத்தளித்து மூச்சுத் திணறி கணத்தில் கைகால் அசைத்த நீச்சல் ஆட்டு மந்தை யோடு மலைமீது பாட்டுப் பாடி பாறை ஒன்றில் கட்டுச் சோறு கடிக்க வெங்காயம் கதைகள் பலவும் கூடவே கேட்டு அந்தி சாயும் வேளையில் திரும்பி அத்தனை ஆடுகளும் பட்டியில் அடைத்து சுடுநீரில் குளித்து சூடாக சாப்பிட்டு முடிகின்ற நாளின் உறக்கம் சுகமே !

கருத்துகள் இல்லை: