வெள்ளி, 8 மே, 2026

இரவுப் பூக்கள்

இரவுப் பூக்கள் வண்ணத் தாரகைகள் ஆகுமோ ? இதயம் தொலைத்த கன்னியர் காளையர் ஆகுமோ? வாழ்வைத் தொலைத்த வறியவர் அனைவரும் ஆகுமோ ? வாழவே தனது கற்பினைத் துறந்த பெண்டிர் ஆகுமோ ? கேள்விகள் மனதில் தோன்றிய தருணம் விடைதேடி கேட்டதால் வருவது வார்த்தைக் கோர்வை கவிதையாய் கதிரவன் வரவில் மலரும் பூக்கள் உண்டு காரிருள் இரவில் பூத்திடும் பூக்கள் உண்டா ? நிலவின் ஒளியில் மலருமோ அல்லி போல் உலவும் சிந்தனை உள்ளத்தின் பூக்கள் ஆயின இரவுப் பூக்களாய் மலரும் சிலரின் வலிகள் இதயம் நுழைந்து உருக்கி கண்ணீர் சுரக்கும் உடலைப் பணயம் வைத்த வாழ்வுக் கொடுமை உற்றவர் பசியைப் போக்க மெழுகாய் எரியும் காலத்தின் கோலமது கடமையின் வலிமை ஆகிடும் காகிதப்படகு கடலலை மீது அலைதல் போலே மூழ்கிடும் என்று தெரிந்தே மிதக்க முயலும் வாழ்வதை இப்பூக்கள் இரவில் மலர்வதாய் ஏற்கும் வழிகளில் ஒன்று வாழத் துடிக்கும் மகளிர்க்கு பழித்தல் விடுத்து பழகிடக் கற்போம் மனதில் பூக்கள் மலரந்தாலே அழகு இரவென்ன பகலென்ன பூசைக்குச் சிலவும் ஆசைக்குச் சிலவும் மாறிடும் அழகை ஆராதிப்போம் ஆராய வேறு உண்டு

கருத்துகள் இல்லை: