வெள்ளி, 8 மே, 2026

பிலிப்பைன்ஸ்

26/02/2025 இரவு முழுதும் பயணித்ததால், Ana விடம் கூறி, ஓட்டலில் Early Check in செய்து, தயாராகி, முதலில் இந்தியன் ரெஸ்டாரெண்ட்டில், உணவு ஆர்டர் செய்து பில் வந்த போது, கொஞ்சம் தலை சுற்றியது. ஒரே வேளைக்கு 11000₹+ . அடுத்து வரும் நாட்களில் எப்படி சமாளிப்பது என்ற பயம் தொற்றிக் கொண்டது. மதிய உணவிற்குப் பிறகு, National Anthropology Museum விசிட். பிலிப்பைன் மக்கள் வாழ்வியலை நெற்பயிர் வகைகள் கேலரியில் ஆரம்பித்து, முதுமக்கள் தாழி வரையிலான விவரிக்கும் விதமாக நன்றாக அமைந்திருந்தது. கால்கள் வலிக்க ஆரம்பித்தது. கண்கள் தூக்கமில்லாமல் எரிய ஆரம்பித்தது. வெளிச் சுற்றில் ஓடு பாதையில் பலரும் ஓடிக் கொண்டிருந்தனர். எதிரிகளுடன் போராடிய பெரும் வீரன் ஒருவனின் சிலை முகப்பில் நிறுவப்பட்டிருந்தது. வெளியே வந்து Luneta Park சென்றபோது இருட்ட ஆரம்பித்தது. அழகான பெரிய கார்டன், பலவித வண்ண நிறத்தில் நீரூற்றுகள். மக்கள் பொழுது போக்கச் சிறந்த இடம். குழந்தைகள், பெரியவர் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீரூற்றுகள் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் மிகப் பிரமாண்டமாய். இதற்கு மேல் எங்கும் போக முடியாது என்பதால், இரவு உணவுக்கு, Mall of Asia விற்குள் Thai Restaurant ல், ஆர்டர் செய்து, சாப்பிட்டு முடித்த போது, பில் இத்தடவை கட்டுக்குள் வந்து, செலவின் பயத்தைப் போக்கியது. மறுநாள் Bohol என்ற தீவிற்கு விமானப் பயணம், காலை 6 மணிக்கு, கார் பிக்அப் என Ana மெசேஜ் அனுப்ப, உறங்கச் சென்ற போது, பிரகாஷ் சீக்கிரமே உறங்க, நான் புரண்டு படுத்தபடி இருக்க, எனது கசினின் குறட்டைச் சத்தம் உச்சஸ்தாயியைத் தொட்டது.

கருத்துகள் இல்லை: