வெள்ளி, 8 மே, 2026

தொந்தி குறையும்

உறங்கும் நேரமிது கவிஞர் சொன்னார் மறைந்த கதிரவன் காலையில் வருவான் கறந்த பாலில் காப்பி தருவாள் நிறைந்த நுரையொடு பித்தளைக் குவளையில் அருந்தி முடித்து அடுத்து என்ன அருகில் செய்தித் தாள் வாசிப்பு அடுப்பில் சூடாய் இட்லி அடுக்கில் குளித்து வந்து மேசையில் தட்டினில் குனிந்து விண்டு சட்னியில் தொட்டு சுவைத்துப் பார்த்தே சொக்கிப் போனேன் சுட்டுத் தந்தவள் இல்லாள் தானே இருக்காதா பின்னே இத்தனை சுவையும் இப்படித் தின்றே கொழுத்துப் போனேன் மருத்துவர் சொன்னார் மடமட. என்றே நடநட மலையைப் போன்ற தொந்தி குறையும் சொன்ன சொல்லைத் தட்ட இயலுமா சொந்தச் செலவில் சூனியம் இதுதான்

கருத்துகள் இல்லை: