வெள்ளி, 8 மே, 2026

பறந்து போனவளே

பாரத்த இறக்கி வக்க தோளத் தான் தேடினேன் பாராத்தா நீ இல்லே எங்கே தான் போனாயோ பாவிமவன் சோக மெல்லாம் பாட்டாலே சொல்லி புட்டேன் பாரா முகமா பரி தவிக்க விட்டு போனாயோ கண்ண மூடினாலே காணு றது உன் முகமே கண்ண மூடு முன்னே கண்ணே நீ வருவாயோ கழனிச் சேறுலே களத்து மேட்டுலே காதலிச்ச நாளெல்லாம் பழசாப் போச்சுதா பறந்து போனவளே பாவமா இல்லையா கஞ்சிய குடிச்சாலும் கவளச் சோறு தின்னாலும் பொண்ணே மிஞ்சி இருக்கும் உன் நினைவே எஞ்சி இருப்பது உன் நினைவே எத்தனை நாள் காத்திருப் பேன் பொன் விளையற பூமி பாதம் பட்ட இடம் காலம் போன பின்னே வந்தா குத்த மடி காத்த கண்ணும் பூத்துப் போச்சு தடி ஆத்தா போன வழி சொல்லு விரைவா நான் வாரேன் போதும் காத்த தெல்லாம் ஓடியே நான் வாரேன்

கருத்துகள் இல்லை: