வெள்ளி, 8 மே, 2026

பிலிப்பைன்ஸ்

27/02/2025 Bohol என்பது ஒரு தீவு மற்றும் Province. Pangalo என்பது விமான நிலையம் உள்ள சிறு நகரம். வருகை வாசலில் Lester வரவேற்று எங்களை ஓட்டலுக்கு. Early check in செய்ய அழைத்துச் சென்றார். பிலிப்பைன்ஸ் ஓட்டல்களில் செக் இன் பிற்பகல் 3 மணி, செக் அவுட் காலை 11 மணி. ஓட்டலை அடைந்த போது அறைகள் தயாராகவில்லை, வரவேற்பில் உட்காரச் சொன்னாள் ரிசப்னிஸ்ட். Bohol ல் மட்டும் மூன்று நாட்களும் தங்க மூன்று அறைகள். மற்ற இடங்களில் இரண்டு. பிரகாஷ் எங்களுள் மூத்தவராதலால் தனி அறை ஒதுக்கப் பட்டது. காப்பி ஆர்டர் செய்து காத்திருந்த போது, அறை கீ கார்ட் தரப் பட்டது. பதினொரு மணியளவில் தயாராக வேண்டுமென்பதால், சிறிது ஓய்வுக்குப் பிறகு பயணம் ஆரம்பம். முதலில் Bohol Bee Farm, தோட்டமும், கை வினைப் பொருள்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் என சுற்றிப் பார்த்த போது, Bee Farm அங்கிருந்து தூரத்தில் உள்ள இடத்திற்கு மாற்றி விட்டதாகச் சொன்னார்கள். ஐஸ் கிரீமும், மதிய உணவு கடலைப் பார்த்த உணவகத்திலும் முடித்து, அடுத்ததாக புராதன மாதாகோவில் விசிட். உள்ளே நுழைந்து ஜெபம் செய்து, படங்கள் கிளிக்கி வெளி வந்த போது, மிதமான வெயிலின் தாக்கம் தெரிந்தது. முன்னதாக Hinagdanan cave ல் கீழே இறங்க நானும் கசினும் சென்ற போது குகையினுள் குளம் போன்ற நீரில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். நீர் சுத்தமாகவே காணப் பட்டது. இருட்டாக இருந்ததால் போட்டோக்கள் தெளிவில்லை. குகையிலிருந்து வெளியேறி, கடையொன்றில் நினைவுப் பொருட்கள் செலக்ட் செய்து வாங்கிய போது, விலைகள் ஒன்றும் மலிவில்லை எனத் தெரிந்தது. அடுத்து ATV Ride செய்யும் இடம் சென்ற போது , மற்றவர்கள் யாரும் விரும்பாததால், நான் மட்டும், 1400 Peso செலுத்தி, கைட் ஒருவர் முன்னே செல்ல காட்டுப் பாதையில் ஓட்டிச் சென்ற போது மிகவும் திரில்லிங்காக இருந்தது. மேடு பள்ளங்கள், பாறைகள் மட்டுமின்றி, சில இடங்களில் இடது புறம் சரிவும், பெருங் கடலும் தெரிந்தது. கரணம் தப்பினால் கடல் என்பதால், பொறுமையாக ஆக்சிலேட்டரை அழுத்தி ஓட்ட வேண்டியதாயிற்று. சுமார் நாற்பது நிமிடத்திற்குப் பிறகு திரும்பலாம் என்று கைடிடம் சொல்லி, புறப்பட்ட இடத்திற்கே திரும்பியானது. கைகள் ஹேண்டில் பாரை லாவகமாகக் கையாள்வதில் வலிக்கத் தான் செய்தன. மீண்டும் பயணித்து, சோம பானம்,நொறுக்குத் தீனி முதலானவற்றை வாங்கி, அறையில் அருந்திய பிறகு, இரவுi உணவுக்கு, Pangalo ஓட்டலிலே பிலிப்பைன் உணவு வகைகளை ஆர்டர் செய்து, சாப்பிட்டு, மறு நாள் காலை ஒன்பது மணிக்கு புறப்பாடு என்பதால் ஏழு மணிக்கு, நீச்சல் குளம் செல்ல நானும் கசினும் முடிவெடுத்து உறங்கச் சென்ற போது, சாக்லேட் மலைகள் எப்படி இருக்குமென் கற்பனை ஓடியது.

கருத்துகள் இல்லை: