வெள்ளி, 8 மே, 2026

கேரளம் மற்றும் தென் தமிழகச் சுற்றுலா

( 05/10/2025) முதல் நாளில் திட்டமிட்டபடி முதலில் Glass Bridge போவதென முடிவானது, எட்டரைக்கு. காலைச் சிற்றுண்டி முடித்து, 34 கிமீ தொலைவில் உள்ள அவ்விடத்திற்குச் சுமார் எட்டு கிமீ முன்பே காரில் செல்லப்பாதை இல்லாததால், ஜீப் ஒன்றைப் பேசிய பிறகு, பஷீர் ஓட்ட ஆரம்பித்தார். போகும் வழியெங்கும் விவரித்த படியே வந்தார். Land Slide ஆன இடம், கோழிக்கோடு பெங்களூர் போக மலையைக் குடைந்து Tunnel என வயநாட்டின் வளர்ச்சி பற்றி. நேராக Glass bridge அருகிலே சென்று நிறுத்தினார் எங்கள் அனைவரின் வயது நிமித்தம். கூட்டம் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை, ஒரு சிலரே. காலணிகளை விட்டு Glass bridge மேலே நடந்து சென்று, பல வித கோணங்களில் போட்டோக்கள் கிளிக்கி, எங்களில் இருவர் மட்டும் உயரே வியூ பாயிண்ட் டவரில் ஏறிப் பார்த்துத் திரும்பினர். மலையேற்றப் பாதை பாதி தூரம் கொழுக்கு மலை போன்றே, பெரிய கற்கள் நிரப்பப் பட்டு, உடல் குலுங்கியது. திரும்ப வரும் போது ஜீப்களின் அணிவகுப்பு பெரியதாய். நல்ல வேளை சீக்கிரம் வந்ததால் கூட்டத்திலிருந்து தப்பித்தோம். அடுத்ததாக செம்பரா மலையுச்சிப் பாதை. மலை ஏறும் ஒற்றையடிப் பாதை ஏறுவதற்கு நூறு மீட்டர் முன்பு வரை அனுமதி உண்டு. மலை உச்சி போக வேண்டுமெனில், ஏறுவதற்கு உடல் தெம்பும், காலை ஏழு மணிக்கு வந்தால், முதலில் வரும் 88 பேருக்கு மட்டும் அனுமதிச்சீட்டு. மேலே ஏற மூன்றரை மணியளவு, திரும்புவதற்கான நேர இடைவெளி, குறுகலான பாதை இதனைக் கணக்கில் கொண்டு கணக்கிடப் படுவதாக தகவல். மிக அழகான தோற்றம் அடிவாரத்தில் இருந்து, பள்ளத்தாக்கு, உச்சி முகப்பு முதலானவை. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, பூக்கோட் ஏரி, மீண்டும் 24 கிமீ பயணம். ஏரி அவ்வளவு பெரியது இல்லையெனினும், போட்டிங் செல்ல கூட்டம், ஞாயிற்றுக் கிழமை ஆதலால் . பாணாசுர டேம் அங்கிருந்து 13 கிமீ, முந்தைய நாள் கரப்புழா டேம் பார்த்ததால் அங்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்து, வரும் வழியில், இந்தியா கேட் உணவகத்தில் மதிய உணவு முடித்து, திரும்ப ஹோம் ஸ்டே போகத் திரும்பிய போது ஐவர் குழுவின் இளயவர்களான 66 வயது பிரபாகரும், 61 வயது கோபாலும் எடக்கல் கேவ்ஸ் போகிறோம் உங்களை இறக்கி விட்டு எனச் சொன்னபோது வீராப்பாய் சுப்ரமணி்்நாங்களும் வருகிறோம் எனச் சொல்ல, அனைவரும் எடக்கல் 32 கிமீ பயணித்த போது கூகுள் மேப் சேரும் நேரம் 3 46 என்றது. குகை அனுமதி நான்கு மணிக்குள் . இடத்தை அடைந்த போது பத்து நிமிடம் இருந்தது. நுழை வாயிலில் இருந்தே பாதை செங்குத்தாக ஆரம்பித்தது. கால்களின் வலிமை, சாப்பாடு முடித்து சில நிமிடங்களே ஆனது எல்லாம் சேர்ந்ததால், என்னுடன் சேர்த்து மூன்று பேர் மேலே வரவில்லை எனக் கூறி விட்டோம். அந்த இரண்டு இளைஞர்கள் சென்று திரும்ப ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. போட்டோக்கள் மிக அழகாய் இருந்தன. நாங்கள் போயிருந்தாலும் ஏறி இருக்க முடியாதென உறுதி்ப் படுத்தினர். தேநீர் அருந்தி புறப்பட்டு, வீட்டை அடைந்த போது, இருட்டத் தொடங்கியது. மறுநாள் எட்டு் மணிக்கே புறப்படலாம், கூகுள் மேப் எட்டு மணி்நேரப் பயணம், உணவு இடை வேளை இவை சேர்த்து ஒன்பது மணி் நேரம் ஆகலாம் , வழியெங்கும் நெடுஞ்சாலை விரிவாக்கம், பிரிட்ஜ் கட்டுவதென இருப்பதால். இரவு உணவு அங்கேயே சமைக்க் ஆர்டர் செய்திருந்த படியால் கடலையைக் கொறித்துக் கொண்டே மூன்று் பேர் மட்டும் ஆடி , சாப்பிட்டுத் தொடர்ந்து, நான் முதலில் வெளியேற, நேற்றைய எனது வெற்றி சமனாக்கப. பட்டது, யாருக்கும் நட்டமின்றி. இரண்டு நாட்களாக தூக்கம் சரியில்லை என்பதால் தொடரை எழுதாமலே உறங்கப் போனேன் .

கருத்துகள் இல்லை: